உயர் நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 5, 2023

உயர் நீதிமன்றம் உத்தரவு

 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு பேச்சு 
பொதுக் கூட்டத்தைக் கூட்டி அதிமுக மேனாள் எம்.எல்.ஏ. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் 

சென்னை அக்.5 தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதற்காக பொதுக் கூட்டத்தைக் கூட்டி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க, அதி முக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. 

கள்ளக்குறிச்சியில் உள்ள மந்தைவெளி பகுதியில் செப்டம்பர் 19-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார் பில் அண்ணா நூற் றாண்டு பொதுக் கூட்டம் நடந்தது. இதில் பேசிய கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக மேனாள் சட்டமன்ற குமரகுரு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச் சர் உதயநிதி குறித்து ஆபாசமாகவும், அவதூ றாகவும் பேசியதாக, கள்ளக்குறிச்சி திமுக தெற்கு ஒன்றிய செயலா ளர் வெங்கடாசலம் காவல் துறையில் புகார் அளித்தார். 

இந்தப் புகாரின் அடிப்படையில், குமர குரு மீது கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் பிணை கோரி குமரகுரு சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது பேச்சுக் காக சமூக வலைதளத்தில் மன்னிப்பு கோரிவிட் டேன். ஆனால், அதன் பிறகும், அரசியல் உள் நோக்கத்தோடு வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, தனக்கு முன் பிணை  வழங்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு 4.10.2023 அன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதி பதி, காவல் துறையிடம் குமரகுரு முறையான அனுமதி பெற்று மற் றொரு பொதுக் கூட்டத்தை நடத்தி, அதில் தனது பேச்சுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த நிபந்தனையை நிறைவேற்றியது தொடர் பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


No comments:

Post a Comment