அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களுக்கு எளிமையான தொழில்நுட்ப சேவை அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 3, 2023

அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களுக்கு எளிமையான தொழில்நுட்ப சேவை அறிமுகம்

சென்னை, அக்.3- நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்பு தேவைகளுக்கு லிப்ட் வசதியை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக திகழும் நிபாவ் ஹோம் லிப்ட்ஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தங்களது தயாரிப்புகளை கொண்டு செல்லும் வகையில் அவர்கள் எந்தவித சிரமும் இல்லாமல் தாங்கள் விரும்பிய லிப்ட்டை வாங்க வசதியாக வட்டியில்லா இஎம்அய் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.  இதன் மூலம் வாடிக்கையாளர் தங்கள் வீடுகளில் எந்தவித கூடுதல் செலவும் இல்லாமல் பாதுகாப்பான லிப்ட் வசதியை பெற முடியும்.

இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விமல் ஆர். பாபு கூறுகையில், இந்த சிறப்பான திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவதோடு, எங்கள் வாடிக்கையாளர்கள் சரியான நேரத்தில் பராமரிப்பு ஆதரவு சேவைகளை பெறுவதற்கும் உத்தரவாதம் அளிக்கிறோம். இந்த எளிய இஎம்அய் திட்டத்தின் மூலம் அதிக வாடிக்கையாளர்களிடம் எங்களின் தயாரிப்புகளை கொண்டு செல்லவும், அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நாங்கள் தொடர்ந்து எங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்த இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment