அரசம்பட்டி, அக். 13- கிருஷ்ணகிரி மாவட் டம் போச்சம்பள்ளி வட்டம் புளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் பகுத்தறிவாளர் கழகத் தோழர் பு.குமார் (கணித ஆசிரியர்) அவர் களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் கல்வி துறையின் உயரிய விருதான தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
இதனை பாராட்டும் விதமாக பழனம்பாடி மற்றும் காந்திபுரம் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக் கட்டளை மற்றும் கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் இணைந்து பாராட்டு விழா நிகழ்ச்சி வெகுசிறப்பாக ஏற்பாடு செய்து நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் அண்ணா சர வணன் தலைமை வகித்து உரை யாற்றினார். அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை தலைவரும் முது கலை ஆசிரியருமான ப. இளைய ராஜா வரவேற்று பேசினார். நிகழ்ச் சிக்கு கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன், செயலாளர் அ.வெங்கடாசலம், மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் த. அறி வரசன், பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிடமணி, துணைத் தலைவர் வ. ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சி யில் சிறப்பு அழைப்பாளராக கிருட்டினகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும் பர்கூர் சட்ட மன்ற உறுப்பினருமான தே.மதிய ழகன் கலந்து கொண்டு ஆசிரி யருக்கு நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்ததோடு, டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக் கட்டளை செயலாளரும் பகுத்தறி வாளர் கழகத் தோழர் கணித ஆசிரியர் பு.குமார் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் ஏழை எளிய மாணவர்கள் சமூகத் தில் முன்னேற கல்வி மட்டுமே மூலதனம் என்பதை அவ்வப்போது மாணவரிடம் தன்னம்பிக்கை வளர்த்து வரும் இது போன்ற ஆசிரியர்கள் இருப்பதினால் தான் இன்றளவும் சமூகத்தில் ஆசிரியர் களுக்கு நன் மதிப்புள்ளது. எனவே தன் குடும்பத்தை மட்டும் பார்க் காமல் சமூகத்தில் இருக்கின்ற மக்களின் மாணவர்களின் நலனில் ஆசிரியர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்பதற்கு இவரே முன் உதாரணமாக இருக்கிறார். எனவே இவர் போன்ற ஆசிரியர்கள் மென்மேலும் வளரவேண்டும் என வாழ்த்தி பேசினார்.
இதைத் தொடர்ந்து அரசம் பட்டி பழனம்பாடி-காந்திபுரம் டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக் கட்டளை கட்டிடம் கட்டுவதற்கு ரூபாய் 10 லட்சம் நன்கொடையாக வழங்குவதாக சட்டமன்ற உறுப்பி னர் தே.மதியழகன் அவர்கள் அறிவித்தார். இந்த அறக்கட்டளை தமிழ்நாடு அளவில் கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பாக செயல்பட வேண்டும் என வேண்டு கோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில் தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டு உரையாற்றினார், மாநில மகளி ரணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, மாவட்ட மகளிரணி தலைவர் இந்திராகாந்தி, தமிழ்நாடு மின்சார வாரியம் கோட்ட பொறி யாளர் கு.முத்துசாமி, புளியம்பட்டி தலைமை ஆசிரியர் கே.அருள்மணி, நடுப்பட்டு தலைமை ஆசிரியர் பாலசுந்தரம் ஆகியோர் வாழ்த்து களை தெரிவித்து பேசினர். நிகழ்ச் சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, தி.மு.க. எ.கே.ஜி மணி, தலைமை ஆசிரியர் ப.சர வணைன், ப.பிரபாகரன்,மத்தூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.முருகேசன், போச்சம்பள்ளி ஒன் றியத் தலைவர் பிரதாப், கீழ்குப்பம் க.பழனிசாமி, மரு.வீரக்குமார், மோரனஅள்ளி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மா.சிவசங்கர், வி.சி.க.திருமுருகன், தொ.இரகு, பழனி மற்றும் அரசம்பட்டி ஊர் பொதுமக்கள், ஆசிரிய பெரு மக்கள், உள்ளிட்டோர் பெரும் திர ளாக கலந்து கொண்டனர். அம் பேத்கர் அறக்கட்டளை பொருளா ளரும் ஆசிரியர் பயிற்று நருமான ஜோதிபாசு நிகழ்ச்சியினை ஒருங் கிணைத்து இணைப் புரை வழங் கினார். நிகழ்ச்சியில் முடிவில் கிருட் டினகிரி மாவட்ட ப.க.துணைத் தலைவர் உதவி பொறியாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment