சென்னை,அக்.5- நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி களின் கேள்விக்கு ஒருமுறைகூட பிரதமர் பதில் சொன் னதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் எம்.பி.க்களின் இடைநீக்கம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது, காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியில் 54 எம்.பி.க்களே இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை 94 பேர் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், 'பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் இரண்டு மடங்கு அதிகரிப்பு. எதிர் கட்சிகளின் கேள்விக்கு ஒரு முறை கூட பிரதமர் பதில் சொன்னதில்லை. அதாவது, கேள்வி கேட்பவர்களை வெளியேற்றுவோம். பதில்களை அனுமதிக்க மாட் டோம். இது தான் பாஜக. இன்று நாடாளுமன்றத்தில் நடப்பதே நாளை நாடெங்கும் நடக்கும்' இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment