தீக்கதிர் 5ஆம் பதிப்பாக நெல்லையிலிருந்து வெளிவரும் சிறப்பான தகவல் அறிந்து பெருமிதம் கொள்கிறோம். சுயமரியாதை இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் 1925இல் தோன்றியது பொருத்தமான வரலாற்று நிகழ்வாகும். சுயமரியாதை, பொதுவுரிமைக் கருத்து ஒரு பக்கமும், பொதுவுடைமைக் கருத்து மறுபக்கமும் சுழன்றடித்து, இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டைத் தனித்துவ பூமியாக வடிவமைத்துக் கொடுத்துள்ளன. தீக்கதிர் 60 ஆண்டுகாலமாக எவ்வளவோ சோதனைகளுக்கும், பொருளாதார இடையூறுகளுக்கும் இடையில் தனது இலட்சியப் பயணத்தை தொடருகிறது என்பது வரலாற்று உண்மை. மதவாதமும், முதலாளித்துவமும் தலைதூக்கி நிற்கும் இந்தக் காலக்கட்டத்தில், ‘‘தீக்கதிரே வருக! உன் கொள்கை தீப்பிழம்பை நான்கு திசைகளிலும் சுழற்றிடுக!’’ - என்று வரவேற்கிறோம் - வாழ்த்துகிறோம்.
Thursday, October 26, 2023
தீப் பிழம்பைச் சுழற்றிடுக! தீக்கதிருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment