இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை:
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கருநாடகா அரசு காவிரியில் நீர் திறக்க வலியுறுத்தி, தமிழ் நாடு அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் கோரிக்கை வைத்ததுடன், உச்சநீதிமன்றத் திலும் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில், ''ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிடுமாறு கருநாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
செப்டம்பர் மாதத்தில் திறந்துவிட வேண்டிய 37.76 டிஎம்சி தண்ணீரை கருநாடக அரசு திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும்'' எனக் கோரியிருந்தது. இரு மாநில அரசு களிடம் பேச்சுவார்த்தை நடத் திய காவிரி மேலாண்மை ஆணையம், செப்டம்பர் 18ஆம் தேதி, காவிரியில் இருந்து தமிழ் நாட்டிற்கு தினமும் வினாடிக்கு 5,000 கன அடி வீதம், 15 நாட் களுக்கு நீர் வழங்க வேண்டு மென உத்தரவிட்டது.
ஆனால், உத்தரவை அமல் படுத்த மறுத்த கருநாடகா அரசு, 'போதிய பருவமழை இல்லாததால், எங்களிடம் போதிய நீர் இல்லை, நீர் திறக்க முடியாது' எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கருநாடகா அரசு அமல்படுத்த வேண்டும், தண் ணீர் திறக்க வேண்டும்' என செப்டம்பர் 21ஆம் தேதி உத்தரவிட்டது.
நிலுவையில் தண்ணீர்
இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் செப்டம்பர்-29ஆம் தேதி ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில், நடந்தது.
தமிழ்நாடு அரசின் சார்பில் , "கருநாடக அணைகளில், 50 டி.எம்.சி.,க்கு மேல் நீர் இருப்பு உள்ளது. எனவே, அம்மாநில அரசு நினைத்தால், 5,000 கன அடி வரை திறந்துவிட முடியும். ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி தந்திருக்க வேண்டிய தண்ணீரின் அள வும் நிலுவையில் உள்ளது.
இதுபோன்ற அனைத்து பாதிப்புகளையும் தமிழ்நாடு தாங்கிக் கொண்டிருக்கிறது.
கருநாடகா அடாவடியாக மறுப்பு
இப்பிரச்னையில் வேண்டு மென்றே உச்சநீதிமன்ற உத் தரவை மீறி கருநாடகா செயல் படுகிறது. எனவே, வினாடிக்கு 12,500 கன அடி நீரை திறந்து விட வேண்டும்" என கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த கருநாடக அரசு, "அணைகளில் உள்ள நீர், எங்களின் தேவைக்கே போதவில்லை.
விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. போராட்டம் உள்ளிட்ட கார ணங்களால் மாநிலத்தின் சட் டம் - ஒழுங்கும் பிரச்னையாகி வருகிறது.
எனவே, 3,000 கன அடி நீர் திறந்து விட வேண்டுமென்ற ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்து ரையை ஆணையம் ஏற்கக் கூடாது" என அடாவடியாக மறுத்தது. ஒழுங்காற்றுக்குழு அளித்த புள்ளி விபரங்களை பரிசீலனை செய்த காவேரி மேலாண்மை ஆணையம், அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து மற்றும் தேவைகளை ஆய்வு செய்தது.
கருகி நாசமாகும் குறுவை
"ஒழுங்காற்றுக் குழு அளித்த பரிந்துரைகளில் குறிப்பிடப் பட்டுள்ள புள்ளி விபரங்கள் ஏற்க கூடியவையாக உள்ளன. எனவே, அந்தப் பரிந்துரைக ளுக்கு ஆணையம் ஒப்புதல் தெரிவிக்கிறது.
அதன்படி, அடுத்த 15 நாட் களுக்கு, அதாவது அக்டோபர் 15 வரை, வினாடிக்கு 3,000 கன அடி வீதம், தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து கருநாடக அரசு தண்ணீரை திறந்துவிட வேண்டும்" என உத்தரவிட்டது. காவேரி படுகைப் பகுதிகளில் சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நெற்பயிர் கள் கருகி நாசமாகிக் கொண்டி ருக்கின்றன.
வறட்சிக் காலங்களில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு உரிய வழிகாட்டுதல் களை வழங்கி இருக்கிறது.
இதன் அடிப்படையில் தான் உச்சநீதிமன்றமும், காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரியில் நீர் திறக்க உத்தர விட்டிருந்தது. ஆனால், கருநா டக அரசு இந்த உத்தரவுகளை ஏற்காமல் அலட்சியப்படுத்தி வருவதால் தமிழ்நாடு கடுமை யாகப் பாதிக்கப்பட்டு வரு கிறது.
ஒன்றிய பாஜக அரசு பாரபட்சம் இல்லாமல் உரிய நடவடிக்கை எடுத்து, காவிரியில் கருநாடகா நீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment