போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர்கள் பேரணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 24, 2023

போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர்கள் பேரணி

புதுடில்லி, அக். 24 -  ஹமாஸ் தாக்கு தலைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது போர் தொடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், அங்கிருக்கும் தங்கள் உறவினர்களின் நிலை குறித்து இந்தி யாவில் உள்ள பாலஸ்தீன மாணவர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறோம். கையில் உள்ள பணம் கரைந்து வருவ தால் உணவு உள்பட அனைத்திலும் சிக்கனத்தை கடைப்பிடிக்கிறோம்.

இங்குள்ள சில நல்ல உள்ளங்கள் எங்களுக்கு உதவி வருகின்றனர்.

காசாவில் எங்களது குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்பது குறித்த எந்த தகவலையும் இந்தியாவில் உள்ள பாலஸ்தீன தூதரகம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை.

இதனால், பாடங்களை படிக்க முடியாமல் தூக்கமின்றி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வருகிறோம். விரைவில் போர் முடிவுற்று குடும்பத்தை காண செல்ல வேண்டும் என்பதே எங்களின் இப்போதைய மனநிலை" என்றனர்.

No comments:

Post a Comment