அம்மாப்பேட்டை பகுதி கழக தலை வர் க. குமாரதாசன் தலைமையேற்று உரைநிகழ்த்தினார்.
அம்மாப்பேட்டை பகுதி கழக செய லாளர் சு. இமயவரம்பன் வரவேற்று உரையாற்றினார்.
தலைமை கழக அமைப்பாளர் எடப் பாடி கா.நா. பாலு, மாவட்ட தலைவர் அ.ச. இளவழகன், காப்பாளர் கி. ஜவ கர், மாநகர தலைவர் அரங்க. இளவர சன், செயலாளர் சி. பூபதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
40ஆவது வார்டு மாமன்ற உறுப்பி னரும், மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளருமான வழக்குரைஞர் ஜி. மஞ்சுளா ராஜ்மோகன், 37ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரும், திமுக நெசவாளர் அணி மாநகர துணை அமைப்பாளருமான மா. திருஞானம், 39ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மா. ஜெயந்தி சரவணன், 35ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரும், திமுக தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளருமான எம். பச்சியம்மாள் மாரியப்பன், 37ஆவது கோட்ட திமுக செயலாளர் டி. சுரேந்தரன், 38ஆவது கோட்ட திமுக செயலாளர் ஜீவா (எ) எம். என். சிவக்குமார், 39ஆவது கோட்ட திமுக செயலாளர் எஸ். சரவ ணன், 40ஆவது கோட்ட திமுக செய லாளர் எஸ். தங்கவேல், 35ஆவது கோட்ட திமுக செயலாளர் வி. சம்பத், திமுக சிறுபான்மையினர் உரிமை பிரிவு மாவட்ட தலைவர் கே. தாஜீதின், மாந கர சிறுபான்மையினர் உரிமை பிரிவு தலைவர் அ. முபாரக், திமுக விவசாய அணி அமைப்பாளர் ஏ.சி. பாரதிராஜா, திமுக நெசவாளர் அணி மாநகர தலை வர் வி.பி.சிங் (எ) ராஜமாணிக்கம், திமுக வர்த்தகர் அணி மாநகர துணை அமைப்பாளர் பீரோ என். ஆறுமுகம், கு. அரி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினருமான இரா.இராஜேந்திரன் அவர்கள் முத்தமிழறி ஞர் கலைஞர் படத்தினை திறந்து வைத்து உரையாற்றினார்.
தன் வாழ்நாள் முழுவதும் மூட நம்பிக்கைகளை ஒழித்திட பகுத்தறிவு கருத்துகளை பட்டி தொட்டியெங்கும் பரப்பியவர். தந்தை பெரியார் அவர் களது கொள்கைகளெல்லாம் நனவாகு கின்ற வகையிலே பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும் தமிழ கத்திலே அந்த கொள்கைகளுக்கு செயல்வடிவம் தந்தவர்கள். இன்றைக்கு சொல்கிறோம் சொத்திலே சமஉரிமை ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் என்று அந்த தந்தை பெரியாரின் எண் ணத்திற்கு, கொள்கைக்கு சட்டவடிவம் கொடுத்தவர்கள் அண்ணாவும், கலை ஞரும். ஆட்சிக்கு வரும்பொழுதெல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் பெண்களுக்காக நிறைய திட்டங்களை தந்து உள்ளார்கள்.
குறிப்பாக அந்த திட்டங்களுக் கெல்லாம் பெயர் சூட்டுகின்ற பொழுது டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் பெயரிலே திட்டம், அன்னை மணியம் மையார் பெயரிலே திட்டம், நாகம்மை யார் பெயரிலே திட்டம், அன்னை தெரசா பெயரிலே திட்டம், மூவாலூர் இராமாமிர்தம் அவர்களது பெயரிலே திட்டங்கள் இன்னும் சொல்லப்போ னால் இருபதுக்கும் மேலான பெண் களுக்கான திட்டங்களை தந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
இன்றைய முதலமைச்சர் அவர்கள் கடந்த இரண்டரையாண்டுகளிலேயே நிறைய திட்டங்களை தந்துள்ளார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானால் பெண்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்பற்காகவே நகரப் பேருந் துகளில் இலவச பயணம், புதுமை பெண்கள் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் போன்றவை கள். இதுபோன்ற திட்டங்களை யெல்லாம் கொண்டுவர காரணம் பெண்கள் முன்னேறினால்தான் இந்த நாடு முன்னேறும் என்கின்ற அடிப்படையில் என்று தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.
சே.மெ.மதிவதனி
கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி உரை யாற்றுகையில்...
இன்றைக்கு இந்தியாவில் படித்தவர் களின் எண்ணிக்கை சதவீதத்தை 2030 குள் அய்ம்பது சதவீதமாக உயர்த்திடு வோம் அதற்க்காகதான் நாங்கள் புதிய கல்விகொள்கையை அமுல்படுத்துகி றோம் என்று சொல்லக்கூடிய ஒன்றிய மாதவாத பிஜேபி அரசும் அதற்கு அத ரவு தெரிவிக்க கூடியவர்களும், பொது மக்களும் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால் தற்பொழுது இந்தியாவில் பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்லக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை சதவீதம் (நிஸிளிஷிஷி ணிழிஸிளிலிவிணிழிஜி ஸிகிஜிமிளி) மாநிலங்கள் வாரியாக பார்த்தால் கேரளா - 37 சதவிகிதம், கர் நாடகா - 28.8 சதவிகிதம், தெலுங்கானா- 32.4 சதவிகிதம், ஆந்திரா - 36.2 சதவிகி தம், பீகார் - 13.6 சதவிகிதம், பிரதமர் மோடி முதல்வராக இருந்து குஜராத் மாநிலம் வளர்ச்சியடைந்ததாக சொல் கிறார்களே குஜராத் மாடல் என்று சொல்கிறார்களே அந்த குஜராத் மாநிலம் 20.4 சதவிகிதமே. திராவிடம் என்ன செய்தது என்று கேட்கிறார்களே அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் தமிழ்நாட்டின் சதவிகிதம் 51.4 சதவிகி தம் இது ஒட்டுமொத்த இந்தியாவின் சதவிகிதத்தில் பாதிக்குமேல் இந்திய அளவில் பார்த்தோமென்றால் வெறும் 27.3 சதவிகிதம் தான். இதுதான் திராவிடம் நமது தமிழக மாணவர்களை படிக்கவைத்த சாதனை. நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் சொல் கிறார் கல்வியில் தமிழ்நாடு போட்டி போட வேண்டுமென்றால் ஜரோப்பிய நாடுகளோடுதான் போடவேண்டும் இதுதான் திராவிட மாடல்.
இந்தியாவிலேயே அதிக அளவி லான மருத்துவ கல்லூரிகளை கட்ட மைத்தது திராவிட இயக்கம் அதிலும் குறிப்பாக அதிகளவு மருத்துவ கல்லூ ரியை கட்டியவர் கலைஞர். அதேபோல நீட்தேர்வினை எதிர்த்து போராடுவது திராவிடர் கழகமும், திராவிட முன் னேற்ற கழகமும்தான் மக்களுக்காக போராடுவது அளுங்கட்சியான திமுகதான். 2024 தேர்தல் நமக்கான வாழ்வா சாவா என்ற போராட்டம் கொண்ட தேர்தல் என்பது போன்ற பல செய்திகளை எளிய வண்ணம் அணைவரும் புரிந்துகொள்ளும்படி கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி உரையாற்றினார்.
மாவட்ட வழக்குரைஞரணி அமைப் பாளர் இரா. செல்வக்குமார் நன்றியு ரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் இறுதிவரை உரையினை கேட்டு மிகவும் பாராட்டினர்.
No comments:
Post a Comment