மின்சாரம்
(1.11.2023 நாளிட்ட 'துக்ளக்'கில் கேள்வி பதில்களுக்குக்குப் பதிலடிகள்!)
கே: சமீபத்தில் சிரித்த இரு சம்பவங்கள்?
ப: 'தி.க.வும் தி.மு.க.வும் உயிரும் உணர்வும் போல' என்று கோவில் கோவி லாகப் போகும் துர்கா கணவர் ஸ்டாலின் கூறியது! 'கோவில்களில் ஆன்மிக புரட்சி செய்கிறார்' என்று கோவிலில் சஷ்டியப்த பூர்த்தி செய்து கொண்ட சேகர்பாபு கூறியது.
பதிலடி: மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் கோவில் கோவிலாகப் போவது அவர் நம்பிக்கை. அதனை வலுக்கட்டாயமாகத் தடுப்பது பகுத்தறிவாகாது. 'ஆகமப் பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகரானால் சாமி தீட்டுப்பட்டுவிடும், சாமி செத்துப் போய்விடும்' என்று வைகனாச ஆகமம் சொல்லுகிறதே - அவ்வளவுப் பலகீன மானதா - உங்கள் கடவுள்?
ஆர்.எஸ்.எஸின் முக்கிய தலைவர் - சாவர்க்கருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?
கே: சர்க்கஸ், அரசியல் - ஒப்பிடுக?
ப: காசு வாங்கிக்கொண்டு பார்வையாளர் களைக் கூடாரத்தில் அனுமதிப்பது சர்க்கஸ். காசு கொடுத்து பார்வையாளர்களைக் கூட்டத்துக்கு அழைப்பது அரசியல்.
பதிலடி: 'பிரபல' ராமேசுவரம், திருக் கடையூர், திருநள்ளாறு கோவில்களுக்கு வட மாநிலங்களிலிருந்து பக்தர்களைக் கூட்டி வர கோயில் ஏஜெண்டுகள் இருக்கிறார்களே அது எப்படி?
'துக்ளக்' குருமூர்த்தி அய்யருக்கு அவரின் குருநாதரான சோ.ராமசாமி அய்யங்கார் சொன்ன பதிலே சுளுக்கு எடுத்தது போல் இருக்கும் அல்லவா?
இதோ சோ.வின் பதில்.
கேள்வி: சென்னை தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலையான் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றது பற்றியும் தங்கள் கருத்து.
சோவின் பதில்: 'இவ்வளவு கட்டணம் கொடுத்தால் வெங்கடேசஸ்வரப் பெரு மானை உங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து, ஒருநாள் தங்க வைக்கிறோம்' என்று ஒரு புதிய திட்டம் வராதது ஒன்றுதான் குறை. ('துக்ளக்' 23.4.2006, பக்கம் 17)
(உப்புக்கண்டம் பறிகொடுத்த பழைய பாப்பாத்திபோல குருமூர்த்தி அய்யர் பதறுவது புரிகிறது!)
கே: நீங்கள் ஆன்மிகவாதியா அல்லது பகுத்தறிவுவாதியா?
ப: நான் நிச்சயமாக ஆன்மிகவாதிதானா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் நிச்சயமாக பகுத்தறிவுவாதி அல்ல என்று எனக்குத் தெரியும்.
பதிலடி: மனிதன் என்றால் அவன் ஆறாவது அறிவுடையவன் - அதாவது பகுத்தறிவு உள்ளவர்! மிருகங்களுக்குத்தான் அய்ந்தறிவு. பகுத்தறிவு கிடையாது.
அப்படி என்றால் இவர் யார்? இந்தப் பட்டியலில் 'சோ'வையும் சேர்த்துக் கொள்ள லாம். பகுத்தறிவு என்றால் பித்தலாட்டம் என்று எழுதியவர் ஆயிற்றே திருவாளர் சோ. ('துக்ளக்' 4.3.2009)
கே: 'கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இஸ்லாமியக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்' என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?
ப: அவர்கள் இஸ்லாமியர்கள். அது போதாதா? வேறு என்ன நியாயம் வேண்டும் என்கிறீர்கள்?
பதிலடி: குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த காலத்தில் நரோடா பாட்டியாவில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் (28.2.2002) 97 இஸ்லாமியர்கள் அடித்துக் கொல்லப்படவில்லையா?
இந்தப் படுகொலையைத் தலைமை தாங்கி முன்னிருந்து நடத்தியவர் குஜராத் மாநில குழந்தை நலம், சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் மாயா கோட்டானி அல்லவா? இவர்கள் எல்லாம் விடுதலையானது எப்படி?
குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகளை மறு விசாரணை நடத்திட நீதிமன்றம் உத்தரவிட்டது எந்த அடிப்படையில்? பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டவர்களில் பலர் துணைப் பிரதமராகவும், காபினட் அமைச்சராகவும் பிற்காலத்தில் பதவி வகித்தது எப்படி? மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பது 'மறு பிறவி' எடுக்கிறதா துக்ளக்?
கே: 'இஸ்ரேல் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்' என தெரிந்தும் காங்கிரஸ், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கக் காரணம் என்ன?
ப: பாரதத்தில் 4,800 யூதர்கள்தான் இருக்கிறார்கள், 20 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். வேறு என்ன காரணம் வேண்டும்.
நமது பதிலடி: பார்ப்பனர்களும் சரி, யூதர்களும் சரி நாடற்றவர்கள், அவர்களுக் கென்று ஒரு நாடு கிடையாது. அண்டிப் பிழைக்க வந்து அடி மடியிலேயே கை வைக்கக் கூடியவர்கள். பார்ப்பனர்கள் இஸ்ரேலை ஆதரிப்பது - இந்த அடிப் படையில்தான்.
கே: பொய் சொல்வதில் யார் சிறந்தவர்கள்?
ப: எதையோ மறைக்க, சமூக நீதி, திராவிட மாடல், பெரியார் கொள்கை, சனாதன எதிர்ப்பு என்றெல்லாம் பேசுகிறவர்கள் பொய் சொல்வதில் சிறந்தவர்கள்.
பதிலடி: தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொல்லும் மனித குல விரோதிகள்தான் இவாளுக்கு ஜெகத்குரு.
ஜெயிலுக்கும் பெயிலுக்கும் அலைந் தவர்கள்தான் இவர்களின் மகா பெரியவாள்! மடத்துக்கு வந்த எழுத்தாளர் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்தவர்தான் இவாளுக்கு முற்றும் "துறந்த" முனிவர்கள். பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக வாதாடாமல் 'காம' கோடிக்கு வக்காலத்து வாங்கியவர் தானே இந்தக் குருமூர்த்திகள்! சமூகநீதி என்றால் இவர்களின் வயிற்றை எல்லாம் கலக்குகிறது.
கே: சோ ராமசாமி இன்று இருந்திருந்தால், அ.தி.மு.க. - பா.ஜ.க. பிரிவினையில் என்ன செய்திருப்பார்?
ப: 1989-ல் அ.தி.மு.க. பிரிந்தபோது, காங்கிரஸை வைத்து, இரண்டு கழகங் களையும் வீழ்த்த முயற்சி செய்தது போல, பா.ஜ.க.வை வைத்து இரு கழகங்களையும் வீழ்த்த முயன்றிருப்பார்.
பதிலடி: 'ஆமாம். சோ.ராமசாமி ஒரு அரசியல் புரோக்கர்தானே' (ஆனந்தவிகடன், 1.3.2012)
அ.தி.மு.க. ஓ.பி.எஸ்ஸை ஜெயலலிதா சமாதிக்குச் சென்று தியானம் செய்யச் சொன்ன ஆசாமி இந்தக் குருமூர்த்தி என்பது நினைவிருக்கட்டும்.
கே: பூணூல் போட்டவர்களெல்லாம் புனிதர்களாக மாறி விடுவார்களா? புனிதத்திற்கும், பூணூலுக்கும் தொடர்பு இல்லை' என்கிறாரே அமைச்சர் பொன்முடி?
ப: பூணூல் போட்டவர்கள் புனிதர்கள் என்பதால்தானே, பொன்முடியின் சக அமைச்சர் சேகர்பாபு, அவர்களின் கையால் சஷ்டியப்த பூர்த்தி செய்து ஆசி பெற்றிருக்கிறார். புனிதத்துக்கும் பூணூலுக்கும் தொடர்பு இல்லை என்கிறாரே பொன்முடி.
பதிலடி: பூணூல் என்பது குருகுலத்தில் சிஷ்யர்கள் கோவணம் கட்டப் பயன்படும் முஞ்சா புல் என்று சொன்னவர் இவாளின் இந்து மதப் பிரச்சார பீரங்கி விவேகானந்தர் அல்லவா? ("சுவாமி விவேகானந்தரின் சம்பாஷணை" பக்கம் 26-28)
கே: சமீபகாலமாக காதல் திருமணங்கள் அதிகரித்து வருவதைப் பார்த்தால், ஜோதிடர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?
ப: காதல் திருமணத்தால் ஜோஸியர் களிடம் போகாத குடும்பங்கள், அதில் பிரச்சினைகள் வரும்போது, அது எப்போது ரத்து ஆகும் என்று கேட்க ஜோஸியர்களிடம் போவார்கள். ஜோஸியர்கள் இல்லாமல் நடக்கும் திருமணம், அவர்கள் இல்லாமல் ரத்து ஆகாது.
பதிலடி: இராமனுக்கும் சீதைக்கும் பொருத்தம் பார்த்து கல்யாணம் பண்ணி வைத்தவர் திரிகால 'ஞானி' வசிஷ்ட மகரிஷி தானே - முடிவு என்னாயிற்று? அரசாள வேண்டியவன் வனவாசம் அல்லவா சென்றான்!
இறுதியில் சரயு நதியில் விழுந்து இராமன் தற்கொலையல்லவா செய்து கொண்டான். சீதாதேவி கதை என்ன? பூமி பிளந்து மாண்ட பெண்மணிதானே!
வசிஷ்டர் பார்த்து வைத்த ஜோதிடமே இந்த நிலை என்றால் கூலிக்கு மாரடிக்கும் இந்த ஜோதிடர்கள் எங்கே?
No comments:
Post a Comment