மாணவர்களை விஞ்ஞானிகளாக உருவாக்கும் : கல்வியாளர்கள் வரவேற்பு!
சென்னை, அக். 30- முதுகலை பொறியியல் ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவித்து எதிர்கால விஞ்ஞானி களாக உருவாக்கும் தமிழ்நாடு அர சின் முயற்சிக்கு கல்வியாளர்களி டையே வரவேற்பு கிடைத்துள்ளது. ஆராய்ச்சிக்கு மாணவர்களுக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட பல சலுகைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் அறிவித்துள்ளது மேலும் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள் ளனர்.
இந்தியாவிலேயே கல்வி, மருத் துவக் துறைகளில் தமிழ்நாடு முன் னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இதற்கு இன்னும் ஊக்க மளிக்கும் விதமாக மாணவர்கள் கல்வி பயிலவும், பெண் கல்வியை ஊக்குவிக்கவும், பட்டப்படிப்பு தொடர என பல்வேறு முயற்சி களை அடுத்தடுத்து கையில் எடுத் துள்ள தமிழ்நாடு அரசு, ஆராய்ச் சிப் படிப்பு தொடர்பான பொறியியல் மாணவர்களை ஊக்குவிக் கவும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, விண்வெளித் துறை யில் தமிழ்நாட்டின் சாதனைகள் தனித்துவத்துடன் உலக அரங்கில் அரங்கேற்றப்பட்டுள்ளது. சந்திரயான், ஆதித்யா திட்ட வெற்றிகள் இதற்கு சிறந்த சான் றாக உள்ளது. இந்த திட்டத்தின் இயக்குநர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு. அந்த வகையில், ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்க தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப் படும் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை பொறியியல் படிப்பை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பை தொடரும் ஆராய்ச்சி மாணவர்கள் 9 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகள் பெயரில் ஊக்கத் தொகைவழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த திட்டத்தின் மூலம் மாண வர்களுக்கு விடுதி, கல்லூரிக் கட்ட ணம் அனைத்தும் வழங்கப்படும். இதற்கென தனியாக குழு அமைத்து அந்த குழுவினர் திறமையான மாண வர்களை தேர்வு செய்வர். அத்துடன், 10 கோடி ரூபாய் தொகுப்பு ஊதி யம் இதற்கென்று தனியாக ஒதுக் கப்படும் என்றும் அறிவித்துள் ளார். ஆராய்ச்சிப் படிப்பு மீதான ஆர்வத்தை மாணவர்களிடையே அதிகரிக்கும் விதமாக முதலமைச் சரின் இந்த அறிவிப்பு உள்ளதாக கூறுகிறார், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ்.
அது மட்டுமில்லாமல், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் எனப் பல்வேறு திட்டங் களை தீட்டி வெற்றிகரமாக செயல் பட்டு வரும் அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு, ஆராய்ச்சிப் படிப்பு தொடர்பான இந்த புதிய அறிவிப்பு எதிர்கால ஆராய்ச்சியாளர் களை உருவாக்குவதற்கான சிறந்த படைப்பு என்கிறார் மாநில கல்லூரி முதல்வர் ராமன். எதிர்கால விஞ்ஞானிகளே வாருங்கள் என்று வர வேற்கும் விதமாக அரசு கூறியுள்ள இந்த அறிவிப்பு அனைவரின் மத்தி யிலும் வரவேற்பை பெற்றதோடு, முன்னுதாரணமாகவும் திகழ்கிறது என கல்வியாளர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment