திருச்சி: தமிழர் தலைவருக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 27, 2023

திருச்சி: தமிழர் தலைவருக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரை

செல்வது வெறும் வாகனம் என்று பார்க்காதீர்கள்; அந்த வாகனத்தில் பயணம் செய்யக்கூடியவர் - வாகனத்தில் அமர்ந்திருக்கின்றவர் நம்முடைய நாட்டிற்குக் கிடைத்த வெகுமானம்!

திருச்சி, அக்.27  திராவிட சாலையில், செல்லும் ஆசிரி யரின்  பரப்புரை வாகனம்- இந்தப் பயணம் சமத்துவத்தை, சமூகநீதியை, நம்முடைய மாநில உரிமைகளைக் காப்ப தற்கு எந்தத் தடைகள் வந்தாலும், அந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்து செல்லவிருக்கிறது. செல்வது வெறும் வாகனம் என்று பார்க்காதீர்கள். அந்த வாகனத்தில் பயணம் செய்யக்கூடியவர் - வாகனத்தில் அமர்ந்திருக் கின்றவர் நம்முடைய நாட்டிற்குக் கிடைத்த வெகுமானம். இந்த வெகுமானம் அதில் பயணம் செய்யும்பொழுது, வருகின்ற தடைகளையெல்லாம் தகர்த்தெறியும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

ஈரோட்டுப் பாதையில் தொடர்பயணம்

  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழா

கடந்த 20.10.2023 அன்று மாலை திருச்சியில் நடைபெற்ற ஈரோட்டுப் பாதையில் தொடர்பயணம் - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பிரச்சார ஊர்தி வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

மேடையில் இருக்கின்ற அனைத்து சான்றோர் பெருமக்களுக்கும், தலைவர்களுக்கும், எதிரே அமர்ந் திருக்கின்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், பத் திரிகைத் துறை, ஊடகத் துறையை சார்ந்த நண்பர்களுக் கும் முதலில் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரச்சார வாகனம் வழங்குகின்ற ஒரு நிகழ்வு. நம்முடைய  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், எங்களையெல்லாம் திருச்சி மாவட்டத்தில் வழிநடத்திக் கொண்டிருக்கின்ற மாண்புமிகு அமைச்சர் அண்ணன் அவர்கள் வழங்க, பிரச்சாரப் பயண வாகனம் வழங் குகின்ற இந்த நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றத் தான் வந்திருக்கின்றேன்.

ஏனென்றால், வாழ்த்துச் சொல்வதற்கு வயது போதாது - அனுபவமும் போதாது என்ற வகையில், ஒரு வித்தியாசமான நிகழ்வாகத்தான் இதை நான் பார்க்கின்றேன்.

பேராசிரியருக்கும், ஆசிரியருக்கும் இடையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்குப் பேசுகின்ற ஒரு வாய்ப்பு

பேராசிரியருக்கும், ஆசிரியருக்கும் இடையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்குப் பேசுகின்ற ஒரு வாய்ப்பை வழங்கியமைக்கு முதலில் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கொஞ்சம் காலதாமதமாக வந்தேன். ஏனென் றால், நான் அய்தராபாத்திலிருந்து வந்த விமானம் கொஞ்சம் காலதாமதமாக வந்தது. எப்படியிருந்தாலும், இந்த விழாவில் கலந்துகொள்ளவேண்டும். ஏன் கலந்து கொள்ளவேண்டும் என்றால், இந்நிகழ்ச்சி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ் வாகும் - என்னுடைய வயதிற்கு- 50 ஆண்டு கள் கழித்து நான் சொல்வேன், அன் றைக்கு நான் ஆசிரி யர் அவர்க ளோடு சேர்ந்து மேடையில் என்னுடைய கருத்து களைப் பகிர்ந்து கொண்டேன் என்று. அதற்காக எப்படியா வது இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற் காகத்தான் நான் இங்கே வந்திருக்கி றேன்.

அந்த விமான ஓட்டி, நிச்சயமாக நாம் எதிர்பார்க்கின்ற இனத்தைச் சார்ந்தவர் அல்ல என்பதில் எனக்கு உள்ள படியே ஒரு மகிழ்ச்சிதான். எதற்காக நான் அய்த ராபாத்திலிருந்து, திருச்சிக்கு வருகி றேன் என்று அவருக் குத் தெரிந்திருந்தால், தாமதமில்லாமல் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த் திருப்பார் என்றுதான் நினைக்கின்றேன்.

அந்த அளவிற்கு மிகவும் முக்கியமான பயணமாக - ஆசிரியர் அய்யா அவர்கள் மேற்கொள்ளவிருக்கின்ற பயணத்தை நாங்கள் பார்க்கின்றோம்.

சமத்துவம், சமூகநீதி, மாநில உரிமைகள் ஆகியவற்றைக் காக்கக் கூடிய 

ஒரு பாதுகாவலர்

பேராசிரியர் அய்யா அவர்கள் இங்கே உரையாற்றும் பொழுது சொன்னதுபோல, ஈரோட்டுப் பாதையில் பய ணித்துக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய ஆசிரியர் அவர்கள், சமத்துவம், சமூகநீதி, மாநில உரிமைகள் ஆகியவற்றைக் காக்கக் கூடிய ஒரு பாதுகாவலராக இருக்கக் கூடியவர்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருக்கக் கூடிய எனக்கு இருக்கின்ற பெருமை என்பது, ஆசிரியர் அய்யா அவர்களைப்பற்றி பல செய்திகளைப் படிக்கின்ற வழக்கம் உண்டு. அவருடைய இயற்பெயரை மாற்றி, இன்றைக்கு ஆசிரியர் அவர்களுக்கு இருக்கின்ற பெயரை வைத்தது ஒரு பள்ளி ஆசிரியர். அது எனக் கான ஒரு பெருமை.

நமக்கான திராவிடத் தளபதியை, 

இந்த நாட்டிற்கு அடையாளம் காட்டியது ஒரு பள்ளி ஆசிரியர்! 

அதுவுமில்லாமல், அந்த ஆசிரியருடைய வழிகாட்டு தலின்படிதான் முதன்முதலில் இவர் மேடை ஏறி முழங்க ஆரம்பித்தார் என்று சொல்லும்பொழுது, நமக்கான திராவிடத் தளபதியை, இந்த நாட்டிற்கு அடையாளம் காட்டியது ஒரு பள்ளியினுடைய ஆசிரியர் என்பது - பள்ளிக்கல்வித் துறையின் அமைச்சராக எனக்கு இருக் கின்ற ஒரு பெருமையாக அதை நான் பார்க்கின்றேன்.

அதுமட்டுமல்ல, ஆசிரியருக்கும் - தந்தை பெரியாருக்கும் இருக்கின்ற உறவு என்பது இங்கே இருக்கின்ற எல்லோரும் அறிந்ததுதான். அந்த உறவு என்பது பல நேரங்களில், தந்தை பெரியார் அவர்களை வயதின் காரணமாக, அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் அவரை காத்தவர் ஆசிரியர் அய்யா என்று சொல்லும் பொழுது, ஆசிரியர் அய்யாவை பல நேரங்களில் காத்தவரும் தந்தை பெரியார் அவர்கள்தான். இதை நான் செய்தியாகப் படித்திருக்கிறேன்.

தந்தை பெரியார் அவர்கள், 

ஆசிரியர் அய்யா அவர்களை அரவணைத்துப் பாதுகாத்திருக்கிறார்!

‘‘நீதி கெட்டது யாரால்?'' என்கிற புத்தகத்தை ஆசிரியர் அவர்கள் எழுதியிருக்கிறார்.

அந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் தந்தை பெரியார் அவர்கள், ‘‘இந்தப் புத்தகத்தை மிக அருமையாக எழுதி யிருக்கிறீர்கள். ஆனால், இதில்  பல சட்டச் சிக்கல்கள் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. நீங்கள் சிறைச்சாலைக்குச் சென்றுவிட்டால், சமுதாய பணிகளை யார் ஆற்றுவது? ஆகவே, என்னுடைய பெயரில் இந்தப் புத்தகத்தை வெளியிடுங்கள்'' என்று தந்தை பெரியார் சொன்னதாக ஒரு செய்தியைப் பார்த்த பொழுது, எந்த அளவிற்கு அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள், ஆசிரியர் அய்யா அவர்களை அரவணைத்துப் பாதுகாத்திருக்கிறார் என்பதற்கு இது போன்ற பல உதாரணங்களைச் சொல்லலாம்.

நம்முடைய தளபதியை சிறைச்சாலையில் பாதுகாத்தவர் ஆசிரியர்!

அதுமட்டுமா, தந்தை பெரியார் அவர்களால் அரவணைக்கப்பட்ட நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள், எங்கள் இயக்கத் தலைவரும், தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சருமான தளபதி அவர்கள், நெருக்கடி காலத்தில் சிறைச்சாலையில் இருந்தபொழுது, தன்னைப்பற்றிக் கவலைப்படாது, எங்கள் தலைவர் அவர்களை அன்றைக்குத் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாத்தார் என்ற பெருமையை நம்மு டைய தமிழ்நாட்டு முதலமைச்சர், ஆசிரியர் அய்யா அவர்களை வைத்துக்கொண்டு, பல மேடை களில் சொல்லியிருக்கின்றார்.

தந்தை பெரியார் - கலைஞரைத் தாண்டி வாழ்ந்து தொடர் பயணங்களை மேற்கொள்ளவேண்டும்!

ஆகவே, அப்படிப்பட்ட ஆசிரியர் அய்யா அவர் களுடைய இந்தப் பரப்புரைப் பயணம் - தந்தை பெரியார் அவர்கள் 94 வயதில் 13 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டரைத் தாண்டி, அந்தப் பயணத்தை மேற்கொண்டார் என்று சொல்லும்பொழுது - அந்த வயதைத் தாண்டி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த வயதைத் தாண்டி, நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள் வாழ்ந்து, தொடர்ந்து இதுபோன்ற பயணங்களை மேற்கொள்ளவேண்டும்.

பரப்புரை வாகனம் தடைகளைத் தகர்த்தெறிந்து திராவிடச் சாலையில் செல்லவிருக்கிறது

அவர் பயணம் செய்கின்ற சாலை என்பது ‘திராவிட சாலை!' திராவிட சாலையில், செல்லும் ஆசிரியரின்  பரப்புரை வாகனம் சமத்துவத்தை, சமூகநீதியை, நம்மு டைய மாநில உரிமைகளைக் காப்பதற்கு எந்தத் தடை கள் வந்தாலும், இந்த வாகனம், இந்தப் பயணம் அந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்து செல்லவிருக்கிறது.

நம்முடைய நாட்டிற்குக் கிடைத்த வெகுமானம்!

செல்வது வெறும் வாகனம் என்று பார்க்காதீர்கள். அந்த வாகனத்தில் பயணம் செய்யக்கூடியவர் - வாக னத்தில் அமர்ந்திருக்கின்றவர் நம்முடைய நாட்டிற்குக் கிடைத்த வெகுமானம். இந்த வெகுமானம் அதில் பயணம் செய்யும்பொழுது, வருகின்ற தடைகளையெல் லாம் தகர்த்தெறியும்  என்கிற வகையில்தான், இன்றைக்கு இந்நிகழ்வில் நான் கலந்துகொண்டேன் என்கின்ற பெருமையைப் பெற்றிருக்கின்றேன்.

எனக்கு உரையாற்றும் வாய்ப்பளித்த திராவிடர் கழகத்தைச் சார்ந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் ஒருமுறை என்னுடைய நன்றியைத் தெரிவித்து என்னுடைய உரையை நிறைவு செய்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  அவர்கள் உரை யாற்றினார்.


No comments:

Post a Comment