மகளிர் உரிமை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 16, 2023

மகளிர் உரிமை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்

 ⭐ பெண்களை பழைமையிலும் மரபு வழியிலும் கிடந்து 

உழலச் செய்வதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் நோக்கம்

அதனை மாற்றி சமத்துவ உலகை நோக்கி பெண்களை 

அழைத்துச் செல்வதுதான் 'இந்தியா' கூட்டணியின் நோக்கம்




சென்னை, அக். 16- பெண்களை ஏமாற்ற மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டம் என ஏமாற்றுகிறார் பிரதமர் மோடி என்றும், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து 2024 ஆம் ஆண்டு தேர்தலில் ஒன்றிய பா.ஜ.க. அரசை வீழ்த்துவோம் என்றும் மகளிர் உரிமை மாநாட்டில் தலைமையேற்று திமுக தலைவரும், முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்று கையில் குறிப்பிட்டார்.

சென்னை நந்­த­னம் ஒய்.எம்.சி.ஏ. மைதா­னத்­தில் 14.10.2023 அன்று திமுக மகளிரணி நடத்­திய ‘மக­ளிர் உரிமைமாநாட்­டு’க்­குத் தலைமை தாங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்­றிய உரை­ வரு­மாறு : பெண்­ணி­னத்­தின் எழுச்­சி­யின் அடை­யா­ள­மாக, இந்த மாநாட்டை ஒரு ‘மாநில மாநாடு’ போல் ஏற்­பாடு செய்து, இதை எழுச்­சி­யோடு நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார் நம்­மு­டைய தங்கை கனி­மொழி அவர்­கள். அவர் கர்­ஜனை மொழி­யாக - கனல் மொழி­யாக இப்­போது நாடா­ளு­மன்­றத்­தில் முழங்கி வரு­வ­தைப் பார்க்­கும்­போது, திமுக  தலை­வ­ராக மட்­டு­மல்ல, அண்­ண­னா­க­வும் நான் மிகுந்த பெருமை அடைந்து வரு­கி­றேன். இந்த மக­ளிர் உரிமை மாநாட்­டைத் தடை­யின்றி ஓடும் மாரத்­தான் ஓட்­டம் போல் நம்­மு­டைய அமைச்­சர் மா.சு. துணை நின்று ஏற்­பாடு செய்­தி­ருக்­கி­றார். அவர் மட்­டு­மல்ல, நம்­மு­டைய அமைச்­சர் செயல்­வீ­ரர் தா.மோ.அன்­ப­ர­சனும் துணை நின்று தன்­னு­டைய கட­மையை நிறை­வேற்­றித் தந்­தி­ருக்­கி­றார். அதற்­காக முத­லில் நான் அவர்­களை எல்­லாம் வாழ்த்­து­கி­றேன்.

திமுக மக­ளி­ர­ணிச் செய­லா­ளர் ஹெலன் டேவிட்­சன் - மக­ளிர் தொண்­ட­ர­ணிச் செய­லா­ளர் நாமக்­கல் ராணி உள்­ளிட்ட மக­ளி­ரணி நிர்­வா­கி­கள் அனை­வ­ருக்­கும் என் வாழ்த்­து­களை தெரி­வித்­துக் கொள்­கி­றேன். காஷ்­மீர் முதல் கன்­னி­யா­கு­மரி வரை இருக்­கும் பெரும்­பா­லான மாநி­லங்களைச் சேர்ந்த பெண் தலை­வர்­களை அழைத்து வந்து, ஏற்­றத்­து­டன் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இந்த மாநாடு, தமிழ்­நாட்­டுப் பெண்­கள் மாநா­டாக மட்­டு­மல்ல - இந்­தி­யப் பெண்­க­ளின் மாநா­டாக அமைந்­துள்­ளது என்­பதை நான் பெரு­மை­யோடு பதிவு செய்து கொள்ள விரும்­பு­கி­றேன்.

இது­வரை ‘சென்னை சங்­க­மம்‘ நடத்­திக் காட்­டிய தங்கை கனி­மொழி, இப்­போது இந்­தி­யச் சங்­க­மத்தை நடத்­திக் காட்டி இருக்­கி­றார். இது­தான்வித்­தி­யா­சம். இவை அனைத்­துக்­கும் மகு­டம்வைப்­பது போல அன்னை சோனியா காந்தி அவர்­கள் வருகை தந்­துள்­ளார்­.

‘நேரு­வின் மகளே வருக! நிலை­யான ஆட்­சி­யைத் தருக!’ என்று 1980-ஆம் ஆண்டு இந்­திரா அம்­மை­யா­ரைச் சுட்­டிக்­காட்­டிச் சொன்ன தலை­வர் கலை­ஞர் அவர்­கள், 2004-ஆம் ஆண்­டில், ‘இந்­தி­ரா­வின் மரு­ம­களே வருக! இந்­தி­யா­வின் திரு­ம­களே வெல்க!’ என்று வர­வேற்­றுச் சொன்­னார்.

தலை­வர் கலை­ஞர் சொன்­ன­தைப் போலவே நாம் நாற்­ப­துக்கு நாற்­பது வெல்ல, அகில இந்­திய அள­வில் காங்­கி­ரஸ் கூட்­டணி மகத்­தான வெற்­றி­யைப் பெற்­றது. அப்­போது தனக்­காக காத்­தி­ருந்த பிர­த­மர் பத­வியை மறுத்து இந்­திய அர­சி­யல் வானில் ஒரு கம்­பீ­ரப் பெண்­மணி என நின்­ற­வர் அன்னை சோனியா காந்தி அவர்­கள். அப்­போது அன்னை சோனியா காந்தி அவர்­கள்­தான் ஆட்­சிக்­குத்தலைமை வகித்து பிர­த­ம­ராக வேண்­டும் என்று முன்­மொ­ழிந்­த­வர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். அது வர­லாறு.

இந்­திய அர­சி­யல் வானில் கம்­பீ­ரப் பெண்­மணி அன்னை சோனியா!

When Thalaivar Kalaignar left us to his resting place, Madam Sonia Gandhi sent a letter to me.  (தலை­வர் கலை­ஞர் அவர்­கள் நம்மை விட்­டுப் பிரிந்து அவர்ஓய்­வி­டத்­துக்­குச் சென்­ற­போது, அன்னைசோனியா காந்தி அவர்­கள் எனக்கு ஒரு கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தார்.)

She wrote, “For me, Kalaignar’s loss is very personal. He always showed me great kindness and consideration, which I can never forget. He was like a father figure to me.”(அதில் அவர், “கலை­ஞர் அவர்­க­ளின் மறைவு எனக்­குத் தனிப்­பட்ட முறை­யி­லும் இழப்­பா­கும். என் மீது அவர் எப்­போ­துமே மிகுந்த கனி­வும் அக்­க­றை­யும் கொண்­டி­ருந்­ததை நான் எப்­போ­துமே மறக்க இய­லாது. அவர் எனக்கு ஒரு தந்­தை­யைப் போன்­ற­வர்” என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.)

அத்­த­கைய ஆழ­மான குடும்­பப் பாசநட்­பைக் கொண்­ட­வர் அன்னை சோனியாகாந்தி அவர்­கள். அவ­ரும் - இளம் அர­சி­யல் ஆளு­மை­யாக மிளி­ரும் அரு­மைச் சகோ­தரி பிரி­யங்கா காந்தி அவர்­க­ளும் இங்கு வந்­தி­ருப்­பது நமக்­கெல்­லாம் மிகுந்த மகிழ்ச்­சியை அளிக்­கி­றது. தன்­னி­க­ரில்லா மெஹ­பூபா முப்தி அவர்­கள் ஒரு மாநி­லத்­தின் மே­னாள் முத­ல­மைச்­சர். சுப்­ரியா சுலே எழுந்­தாலே நாடா­ளு­மன்­றத்­தில் பா.ஜ.க.வினர் அஞ்சி நடுங்­கு­வார்­கள்.

பீகா­ரில் இருந்து அருமை நண்­பர் நிதிஷ்­கு­மா­ரின் குரலை எதி­ரொ­லிக்க லெஷி சிங் வந்­தி­ருக்­கி­றார். டில்லி முத­ல­மைச்­சர் அர­விந்த் கெஜ்­ரி­வால் எண்­ணத்­தைச் சொல்­வ­தற்கு டில்லி சட்­டப்­பே­ரவை துணைத் தலை­வர் ராக்கி பிட்­லன் வந்­தி­ருக்­கி­றார். சமாஜ்­வாதி கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் அருமை நண்­பர் அகி­லேஷ் யாதவ் அவர்­க­ளது மனை­வி­யு­மான டிம்­பிள் யாதவ் அவர்­க­ளும், அக்­கட்­சி­யின் மக­ளிர் அணி தேசிய தலை­வர் ஜூஹி சிங் அவர்­க­ளும் வருகை தந்­துள்­ளார்­கள். மேற்கு வங்­கப் பெண் சிங்­கம் மம்தாவின் பிர­தி­நி­தி­ யாக சுஷ்­மிதா தேவ் வருகை தந்­துள்­ளார். இட­து­சாரி இயக்­கங்­க­ளின் பிர­தி­நி­தி­யாக சுபா­ஷினி அலி­யும், ஆனி ராஜா­வும்இடம்­பெற்­றுள்­ளார்­கள். எனவேஇந்த மேடையே இந்­தியா கூட்­ட­ணி ­யாக காட்­சி­ய­ளிக்­கி­றது.

அனைத்து மாநி­லங்­க­ளி­லும் ஒன்­று­பட்ட கூட்­டணி அமைக்க வேண்­டும்!

I would like to request all the leaders present on the dias. The BJP can be defeated only through unity. Tamil Nadu has shown this since the 2019 elections. A united alliance, like the one in Tamil Nadu, should be formed in every state across India. ( (மேடை­யில் இருக்­கும் தலை­வர்­கள் அனை­வ­ருக்­கும் நான் வேண்­டு­கோள் வைக்க விரும்­பு­கி­றேன். பா.ஜ.க.வை ஒற்­று­மை­யின் மூல­மாக மட்­டுமே வீழ்த்த முடி­யும். தமிழ்­நாடு இதை 2019 தேர்­தல் முதலே நிரூ­பித்து வரு­கி­றது. தமிழ்­நாட்­டில் உள்­ளது போல ஒன்­று­பட்ட கூட்­டணி இந்­தி­யா­வின் அனைத்து மாநி­லங்­க­ளி­லும் அமைக்­கப்­பட வேண்­டும்.)

If the anti-BJP parties can unite and rise above the minor differences, we can surely defeat the BJP, which is against the interests of the people of India.

I urge our sisters present here to relay this message to their party leaders!  (பா.ஜ.க.வை எதிர்க்­கும் அனைத்­துக் கட்­சி­க­ளும் நமக்­கி­டை­யே­யான சிறிய வேறு­பா­டு­களை மறந்து ஒன்­று­பட்டு நின்­றால், நம்­மால் நிச்­ச­யம் இந்­திய மக்­க­ளுக்கு எதி­ரான சக்­தி­யான பா.ஜ.க.வை வீழ்த்த முடி­யும். இங்கே வருகை தந்­துள்ள சகோ­த­ரி­கள் இந்­தச் செய்­தியை உங்­கள் கட்­சித் தலை­வர்­க­ளி­ட­மும் கொண்டு சேர்க்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.)

பார­தீய ஜனதா கட்­சி­யைத் தோற்­க­டிப்­பது என்­பது, இந்­தி­யா­வில் இயங்­கும் அனைத்து ஜன­நா­யக சக்­தி­க­ளின் வர­லாற்­றுக் கடமை! மக­ளிர் உரி­மை­யைக் காக்க மாநாடு கூட்டி இருக்­கி­றார் கனி­மொழி. மக­ளிர் உரிமை மட்­டுமா? பாஜக ஆட்­சி­யில் அனைத்து மக்­க­ளது உரி­மை­க­ளும் பறிக்­கப்­பட்டு விட்­டது. இன்­றைக்கு நாம் பார்க்­கும் நாடா­ளு­மன்ற அமைப்பு முறை இருக்­குமா? மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டும் மக்­க­ளாட்சி இருக்­குமா? என்ற கேள்வி பெரி­தாக எழுந்து வரு­கி­றது.

ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே பண்­பாடு - ஒரே தேர்­தல் - ஒரே தேர்வு - ஒரே உணவு என்ற பெய­ரால் ஒற்­றைக் கட்சி ஆட்­சி­யைக் கொண்டு வரப்­பார்க்­கி­றார் பிர­த­மர் நரேந்­திர மோடி. அது நடந்­தால், ஒரே மனி­தர் என்ற எதேச்­சா­தி­கா­ரத்­துக்கு அது வழி­வ­குக்­கும். என­வே­தான் வர இருக்­கும் நாடா­ளு­ மன்­றத் தேர்­த­லில் பா.ஜ.க.வை முற்­றி­லு­மா­கத் தோல்வி அடை­யச் செய்ய வேண்­டும்.

நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நெருங்கி வரு­வ­தால் பெண்­களை ஏமாற்ற, மக­ளி­ருக்கு நாடா­ளு­மன்­றம் - சட்­ட­மன்­றங்­க­ளில் 33 விழுக்­காடு இட­ஒ­துக்­கீடு என்று சட்­டம் கொண்டு வந்­த­தைப் போல ஏமாற்­று­கி­றார்­கள். இங்கு உரை­யாற்­றிய அத்­தனை பேரும் மிகத் தெளி­வாக எடுத்­துச் சொன்­னார்­கள். எனவே நான் அதி­கம் விளக்­கம் சொல்ல விரும்­ப­வில்லை.

2024 ஆம் ஆண்­டுக்­குப் பிறகு மோடி ஆட்சி இருக்­கப் போவ­தில்லை!

33 விழுக்­காடு இட­ஒ­துக்­கீடு பெண்­க­ளுக்­குக் கிடைத்­து­வி­டக் கூடாது என்ற சதி எண்­ணத்­தோ­டு­தான் இந்­தச் சட்­டத்­தையே பா.ஜ.க. கொண்டு வந்­தி­ருக்­கி­றது என்று நான் கரு­து­கி­றேன். அப்­ப­டித்­தான் எல்­லோ­ருக்­கும் எண்­ணம் வரு­கி­றது.

‘நடை­பெற இருக்­கும் நாடா­ளு­மன்ற - சட்­ட­மன்­றத் தேர்­த­லில் பெண்­க­ளுக்கு 33 விழுக்­காடு இட­ஒ­துக்­கீடு வழங்­கப்­ப­டும்‘ என்று இந்த சட்­டம் சொல்லி இருந்­தால் பிர­த­மர் நரேந்­திர மோடியை நாமெல்­லாம் பாராட்­ட­லாம்.

மக்­கள் தொகைக் கணக்­கெ­டுப்பு முடிந்த பிறகு - அதை வைத்து தொகுதி மறு­வ­ரை­யறை முடிந்த பிறகு - என்று சொல்­கி­றார்­கள். பழைய படங்­க­ளில் “என் கையில் உள்­ளதை நான் தர­வேண்­டு­மா­னால் ஏழு மலை­யைச் சுற்றி வா! ஏழு கட­லைச் சுற்றி வா!” என்று கதைசொல்­வார்­கள் அல்­லவா? அது போன்றகப்சா சட்­டத்தை மோடி நிறை­வேற்றி விட்டு, பெண்­க­ளுக்கு 33 விழுக்­காடு இட­ஒதுக்கீடு கொடுத்­து­விட்­ட­தாக பிர­த­மர் சொல்­லிக் கொள்­கி­றார்.

2029-ஆம் ஆண்­டு­தான் இந்த இட­ஒ­துக்­கீடு கிடைக்­கும் என்­றும், 2034-ஆம் ஆண்டு கூட ஆக­லாம் என்­றும் கணக்­கிட்­டுச் சொல்­கி­றார்­கள். எது­வாக இருந்தா­லும் 2024-ஆம் ஆண்­டுக்­குப் பிறகு மோடி ஆட்­சி­யில் இருக்­கப் போவ­தில்லை என்ற முடி­வுக்கு மக்­கள் வந்­து­விட்­டார்­கள்.

1996-ஆம் ஆண்டு தி.மு.க. - காங்­கி­ரஸ் ஆத­ரித்த அய்க்­கிய முன்­னணி ஆட்­சிக் காலத்­தில் இப்­படி ஒரு சட்­டம் கொண்டு வரப்­பட்­ட­போது இந்த நிபந்­த­னை­களை நாம் விதிக்­க­வில்லை. 2010-ஆம் ஆண்­டும் நமது கூட்­டணி அரசு இப்­படி ஒரு சட்­டத்தை கொண்டு வந்­த­போ­தும் இது மாதி­ரி­யான நிபந்­த­னை­களை விதிக்­க­வில்லை.இப்­போது பா.ஜ.க. நிபந்­தனை போடு­கி­றதுஎன்­றால் அவர்­கள் உண்­மை­ யான அக்­க­றை­யு­டன் இதனை கொண்டு வர­வில்லை.

மக­ளிர் எந்த உரி­மை­க­ளை­யும் பெற்­று­வி­டக் கூடாது, வீட்­டுக்­குள் முடங்­கிக் கிடக்க வேண்­டும் என்று நினைக்­கும் கட்­சி­தான் பா.ஜ.க. அன்னை சோனியா காந்தி அவர்­க­ளும் - பிரி­யங்கா காந்தி அவர்­க­ளும் இந்த மேடை­யில் இருக்­கி­றார்­கள். இங்கு ஒரு விட­யத்தை நினை­வு­ கூர்­வது பொருத்­த­மாக இருக்­கும். அவரே பேசு­கி­ற­போது சொன்­னார், பிர­த­மர் ராஜீவ் காந்தி அவர்­கள்­தான், உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் பெண்­க­ளுக்­கான இட­ஒ­துக்­கீட்டை முதன்­மு­த­லாக உறுதி செய்­தார்.

இதன் தொடர்ச்­சி­யாக தமிழ்­நாட்­டில் உள்­ளாட்சி அமைப்­பு­க­ளில் பெண்­க­ளுக்­கான இட­ஒ­துக்­கீட்டை முதன்மு­த­லாக 1996-ஆம் ஆண்டு வழங்­கி­ய­ வர் நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­கள். இப்­போது உள்­ளாட்­சி­யில் 50 விழுக்­காட்­டில் பெண்­கள் பொறுப்­பில்இருக்­கி­றார்­கள். பா.ஜ.க. கொண்டுவந்த சட்­டத்­தில், இன்­னொரு முக்­கி­ய­மான விட­யம், இதர பிற்­ப­டுத்­தப்­பட்ட பெண்­க­ளுக்­கும் - சிறு­பான்­மை­யின பெண்­க­ளுக்­கும் இட­ஒ­துக்­கீடு வழங்­க­வில்லை. அப்­படி வழங்­கி­னால்­தான் ஏழை எளிய - விளிம்பு நிலை மக்­க­ளின் குரல் சட்­ட­மன்­றத்­தி­லும் - நாடா­ளு­மன்­றத்­தி­லும் ஒலிக்­கும். அப்­படி ஒலித்­து­வி­டக் கூடாது என்று பா.ஜ.க.நினைக்­கி­றது.

இதை பா.ஜ.க.வின் அர­சி­யல் தந்­தி­ர­மாக மட்­டு­மல்ல, அர­சி­யல் சதி­யா­க­வும்­தான் பார்க்க வேண்­டி­யுள்­ளது. இதனை நாம் சுட்­டிக் காட்­டி­னால், ஒரு அரிய கருத்­தைப் பிர­த­மர் அள்ளி விடு­கி­றார். அதா­வது, பெண்­களை ஜாதி­ரீ­தி­யா­கப் பிள­வு­ப­டுத்­தப் பார்க்­கி­றோ­மாம். ஜாதி­ரீ­தி­யாக, மத­ரீ­தி­யாக மக்­க­ ளைப் பிள­வு­ப­டுத்­து­வது யார் என அனை­வ­ருக்­கும் தெரி­யும்.

இட­ஒ­துக்­கீடு நாம் கேட்­கி­றோம் என்­றால், ஜாதி­ரீ­தி­யா­கப் பிரிப்­ப­தற்­கா­கவா கேட்­கி­றோம் என்­ப­தல்ல. அனைத்துமக­ளி­ரும் எல்­லா­வித உரி­மை­க­ளும் பெற்ற­வர்­க­ளாக உயர வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான். இதை விட்­டுக் கொடுத்து­விட்­டால் - அடுத்­த­டுத்து சமூ­க­நீ­தி­யைக் காவு வாங்கி விடு­வார்­கள். எந்­தச் சூழ­லி­லும் சமூ­க­நீ­தியை நாம் விட்­டுக் கொடுத்­து­வி­டக் கூடாது. இது­தான் நமக்கு இருக்க வேண்­டிய உறுதி. ராகுல் காந்தி அவர்­கள் சமூ­க­நீ­திக் குரலைத் தான் தொடர்ந்து எதி­ரொ­லித்து வரு­கி­றார். இந்­தியா கூட்­டணி என்பது தேர்­தல் கூட்­ட­ணி­யாக மட்­டு­மல்ல - கொள்­கைக் கூட்­ட­ணி­யாக அமைந்­துள்­ளது.

சமூ­க­நீதி - மதச்­சார்­பின்மை - மாநில சுயாட்சி - கூட்­டாட்­சிக் கருத்­தி­யல் அனை­வர்க்­கு­மான அர­சி­யல் பங்­கீடு என்ற கோட்­பா­டு­க­ளைக் கொண்­ட­தாக இந்­தியா கூட்­டணி அமைந்­துள்­ளது. இந்­தியா கூட்­ட­ணியை வெற்றி பெற வைப்­ப­தன்மூல­மாக மக­ளிர் உரிமை மட்­டு­மல்ல - அனைத்து உரி­மை­க­ளும் அனை­வ­ருக்­கும் கிடைக்­கும் இந்­தி­யாவை நாம் உரு­வாக்க வேண்­டும்.

சொத்­தில் சம உரிமை, வேலை­வாய்ப்­பில் பெண்­க­ளுக்கு 30 விழுக்­காடு இட ஒதுக்­கீடு, ஆரம்­பப் பள்­ளிக்­கூ­டங்­க­ளில் கட்­டா­ய­மாக பெண்­க­ ளைத்­தான் ஆசிரி­யர்­க­ளாக நிய­மிக்க வேண்­டும் என்ற சட்­டம், கர்ப்­பி­ணிப் பெண்­க­ளுக்கு உத­வித் தொகை, வித­வை­க­ளுக்கு மறு­வாழ்வு திட்­டம், ஒரு ஏழை-­எ­ளிய குடும்­பத்­தில் பிறந்­தி­ருக்­கும் பெண்­ணுக்கு திரு­ம­ணம் என்­றால், அந்­தப் பெண்­ணுக்கு நிதி உதவி செய்­யும் ஒரு அற்­பு­த­மான திட்­டம், இப்­போது மக­ளிர் உரி­மைத் தொகை - கடந்த மாதம் 15-ஆம் தேதி, 14-ஆம் தேதி இரவே சென்று சேர்ந்­து­விட்டது. இந்த மாதம் 15-ஆம் தேதி வரப்­போ­கி­றது - 14-ஆம் தேதி இரவே வந்து சேரப்­போ­கி­றது. எனவே மாதா­மா­தம் ஆயி­ரம் ரூபாய். உத­வித் தொகை அல்ல, பெண்­களே... அது உங்­க­ளுக்கு இருக்­கும் உரி­மைத் தொகை. மறந்து விடாதீர்கள்.

பேருந்­து­க­ளில் விடி­யல் பய­ணம், பெண் அர்ச்­ச­கர்­கள், ஓது­வார்­கள் நிய­ம­னம் - இப்­படி தமிழ்­நாட்டு பெண்­க­ளுக்கு பல்­வேறு திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­திக் காட்­டும் நமது திரா­விட மாடல் கொள்­கை­கள் இந்­தியா முழு­மைக்­கும் பர­வும் நாளே, மக­ளிர் உரிமை பெற்ற நாளாக அமை­யும்.

அதற்­கான அடித்­த­ளத்தை உரு­வாக்­கும் இந்த மாநாட்டை நடத்திக்காட்டியிருக்கும் என்­னு­டைய அருமைதங்கை கனி­மொ­ழிக்­கும் அவருக்கு துணை நின்ற திமுக மக­ளி­ரணி நிர்­வா­கி­ க­ளுக்­கும் என்­னு­டைய வாழ்த்­து­கள், பாராட்­டு­கள். வாழ்க! வாழ்க! மிழிஞிமிகி வாழ்க! மிழிஞிமிகி கூட்­டணி வெல்க!

இவ்­வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.

No comments:

Post a Comment