பாரா ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரருக்கு முதலமைச்சர் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 24, 2023

பாரா ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரருக்கு முதலமைச்சர் பாராட்டு

சென்னை, அக். 24 - பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டு தலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், "உயரம் தாண்டுதல் ஜி63 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியா வுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது தங்கவேலுவுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்! உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!" என்று பதிவிட்டுப் பாராட்டியுள்ளார்.

இதே உயரம் தாண்டும் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய வீரர் சைலேஷ் குமார், வெண்கலம் வென்ற இந்திய வீரர் இராம்சிங் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment