பெரியார் மருந்தியல் கல்லூரியில் புற்றுநோய்க்கான கதிரியக்க மருத்துவம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 9, 2023

பெரியார் மருந்தியல் கல்லூரியில் புற்றுநோய்க்கான கதிரியக்க மருத்துவம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்

திருச்சி, அக். 9- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் புற்று நோய்க்கான கதிரியக்க மருத்து வம் குறித்த பன்னாட்டு கருத்த ரங்கம் 05.10.2023 அன்று மாலை 3 மணியளவில் கல்லூரி அரங்கத் தில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையில் மூலிகை மருந்தி யல் துறைத் தலைவர் முனைவர் எஸ். சகிலா பானு வரவேற்புரை யாற்றினார். இங்கிலாந்.து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் கதிரியக்க வேதியியல் துறை ஆய் வறிஞர் முனைவர் மணிகண்டன் கதிர்வேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புற்றுநோய் மருத்துவத்தில் கதிரியக்க மருந் தியல் கண்டுபிடிப்புக்கள் குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். 

மேலும் ஆராய்ச்சி குறித்த அறிவியல் அறிவை மாணவர்கள் கல்வி பயிலும் காலங்களிலேயே வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்கள் அதிக அள வில் ஆராய்ச்சியில் ஈடுபடவேண் டும். மேலை நாடுகளில் பெண் கள் அதிக அளவில் ஆய்வுத் துறையில் சிறப்பாக பங்காற்றி வருகின்றனர். ஆனால் நம் நாட் டில் பெண்கள் ஆராய்ச்சித் துறையில் வளரமுடியாமல் பல சமுதாய அடக்குமுறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பெரியார் மருந்தியல் கல்லூரி யில் பயிலும் பெண்கள் அதிக அளவில் ஆராய்ச்சியில் துணிந்து ஈடுபட வேண்டும் என்று கேட் டுக் கொண்டார்.

புற்றுநோய்க்கு தீர்வு காணும் வகையில் கதிரியக்க ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரு கின்றன. மிக விரைவில் புற்று நோயும் முற்றிலும் குணப்படுத் தக்கூடிய நோயாக மாறக்கூடிய புதிய மருந்துகள் கண்டுபிடிக் கப்பட்டு வருகின்றன. குறைந்த விலையில் இந்நோய்க்கான மருந்துகள் ஏழை, எளிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் மருந்தாளுநர்கள் ஆராய்ச்சித்துறையில் அதிகம் ஈடுபட வேண்டும் என்று கேட் டுக்கொண்டு, கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளிக்கும் மூன்று மாணவர்களுக்கு தலா 1,000- ரூபாய் ஊக்கப்பரிசாக வழங்கப் படும் என்று தெரிவித்தார். பெரியார் மருந்தியல் கல்லூரி யின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல் வர் முனைவர் கோ. கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியின் முடிவில் மருந்தாக்க வேதியியல் துறை பேராசிரியர் எம்.கே.எம். அப்துல் லத்தீப் நன்றியுரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர் அறிவித்த பரிசுத்தொகையினை இளநிலை மருந்தியல் மாணவர்கள் எஸ். மோனிகா, எஸ். மணிவாசன் மற்றும் ஆர். வசந்த் ஆகியோ ருக்கு  பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை 6.10.2023 அன்று வழங்கி தமது பாராட்டுக் களை தெரிவித்தார்.

No comments:

Post a Comment