சென்னை, அக்.5 மாநிலக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை தமிழில் மொழிப் பெயர்க்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்துக்கு என தனித்துவ கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படிமாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடர் பாக இந்த குழுவினர் ஏற்கெனவே பல்கலைக்கழக துணைவேந்தர் கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்தனர். இதையடுத்து கல்விக் கொள் கைக்கான பரிந்துரைகள் அடங் கிய வரைவறிக்கை தயாரிக்கும் பணியில் குழுவினர் ஈடுபட் டனர். அனைத்து பணிகளையும் முடித்து ஜூன் மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று முதலில் தெரிவிக்கப் பட்டது. ஆனால், அறிக்கை தயாரிப்பு முடிவடையாததால் இந்த குழுவுக்கு செப்டம்பர் மாதம் வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி மாநில கல்விக் கொள்கை குழுவினர் சுமார் 500 பக்கங்கள் வரையான வரைவு அறிக்கையை கடந்த மாதம் தயார் செய்தனர். அதற்கு ஒட்டுமொத்த குழுவின் ஒப்புதலும் கிடைத்தது. அந்த வரைவு அறிக்கையை தமிழில் மொழிப்பெயர்க்கும் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர் கள் சிலர்கூறும்போது, ‘‘மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வடிவமைக்கப் பட்டு, தமிழில் மொழிப் பெயர்க்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. அறிக்கை யில் செய்தசில திருத்தங்களால் சற்று தாமதமாகிவிட்டது. எனி னும், சிறந்தமுறையில் வரைவு அறிக்கையை தயார் செய்துள் ளோம். மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் அனுமதி பெற்று விரைவில் அரசிடம் இந்த வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதிலுள்ள அம்சங்கள் அடுத்த கல்வி யாண்டு (2024-_2025) முதல் அமலுக்கு வரும்’’ என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment