ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 26, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

26.10.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை: 

* அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிப் பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘பாரத்’ என மாற்றப்பட வேண்டும் என தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (என்சிஇஆர்டி) உயர்மட்டக் குழு பரிந்துரைத்துள்ளது. 

* சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி பேசும் ஆளுநர்  -சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுப்பது ஏன்? அமைச்சர் முனைவர் க.பொன்முடி கேள்வி

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* காஷ்மீர் மேனாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்தார் ராகுல்: புல்வாமா தாக்குதல், மணிப்பூர் கலவரம் குறித்து உரையாடல்

* உ.பி.யின் கட்டி முடிக்கப்படாத சுகாதார மய்யங் களின் லட்சணம்: மாட்டு சாணம், காவல்துறை குடியிருப்பு கள், கரும்பு வயல்கள். அரசு விதிமுறைகளின்படி, ஒரு சுகாதார மய்யத்தில் 15 பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். கதவுகள் மற்றும் ஜன்னல்கள் இல்லாமல் இந்த கட்டமைப்புகள் பல ஆண்டுகளாக கைவிடப் பட்டதாக உள்ளூர்வாசிகள் குற்றச்சாட்டு.

ஹிந்துஸ்தான் டைம்ஸ்:

* ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, தங்கள் கருத்துக்களை மூன்று மாதத்திற்குள் அனுப்புமாறு அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதுகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ராமர் கோவில் பாஜகவின் முக்கிய 2024 பிரச்சாரக் கருப்பொருளாக இருக்கும். பிரதமர் மோடி ஜனவரி 22, 2024இல் கோவிலை திறக்க ஒப்புதல்.

* அய்பிசி, சிஆர்பிசி, அய்இசி மசோதா 3 குற்றவியல் சட்ட திருத்தம் குறித்த வரைவு அறிக்கையை ஏற்க அவசரம் ஏன்? எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

- குடந்தை கருணா

No comments:

Post a Comment