தொடக்கப் பள்ளி சார்பு விதிகளில் மாற்றம் செய்ய சிறப்புக்குழு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 5, 2023

தொடக்கப் பள்ளி சார்பு விதிகளில் மாற்றம் செய்ய சிறப்புக்குழு

சென்னை, அக். 5 -  தொடக்கப் பள்ளி சார்பு விதிகளில் மாற்றம் செய்வது குறித்து தமிழ்நாடு அரசுக்கு ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்க 3 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.  

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணை: 

உயர் நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படை யில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி சார்பு விதிகளில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும் ஓர் அலகு என்று இருக்கிறது. இதை மாவட்ட அல்லது மாநில முன்னுரிமையாக மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்து உரிய பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளிப்பதற்காக தனிக் குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. 

அந்தக் குழுவின் தலைவராக பள்ளிக் கல்வி இயக்கு நர் க.அறிவொளி செயல்படுவார். அதன் உறுப்பினர்களாக தொடக்கக் கல்வி இயக்குநர், இணை இயக்குநர் (பணி யாளர் தொகுதி) ஆகி யோர் இருப்பார்கள். இந்தக் குழு தமது அறிக் கையை 3 மாத காலத்துக்குள் அரசிடம் சமர் பிக்க வேண்டும். இந்தக் குழுவின் பணிகளுக்கு தேவை யான ஏற்பாடுகளை தொடக்கக் கல்வி இயக்குநர் கவனித்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment