அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக விபத்து மற்றும் மார்பகப் புற்றுநோய் நாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 24, 2023

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக விபத்து மற்றும் மார்பகப் புற்றுநோய் நாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை, அக். 24 - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 19.10.2023 அன்று சென்னை, அரசு ஸ்டான்லி மருத் துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக விபத்து நாளை முன்னிட்டு, முதலுதவி செயல்முறை விளக்கத் தினை பார்வையிட்டு, விபத்து மற் றும் முதலுதவி கையேட்டினை வெளியிட்டு, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் பாக மருத்துவமனையின் சார்பில் மேற்கொள்ளப்படும் செயல்முறை கள் குறித்து கேட்டறிந்து, இராஜஸ் தான் இளைஞர் அமைப்பின் சார்பில், “திருப்தி” எனும் திட்டத்தின் கீழ், உள் நோயாளிகளின் உடனிருப்போருக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்து, முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

உலக விபத்து நாள்

உலக விபத்து நளை முன்னிட்டு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கும் விதமாக கையேடு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் கையேட்டில் விபத்துகள் ஏற் பட்டவுடன் செய்யப்படும் முதலுதவி கள் குறித்து விளக்கங்கள் இடம் பெற்றுள்ளது.  

மேலும், சென்னை சட்டக் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்க ளுக்கு முதலுதவி பயிற்சிகள் வழங் கப்படுகிறது. மேலும், உலக விபத்து நாளின் கருப்பொருளாக குரல்க ளுக்கு அதிகாரமளித்தல், காயங்களை குணப்படுத்துதல் இந்த ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. 

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. அந்தவகையில் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்க ளுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறி தல் முகாம் 11.10.2023 முதல் 31.10.2023 வரை நடத்தப்படுகிறது. இதில் சிறப்பு மெமோகிராம் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு அடங்கிய தகவல் விவரங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படவிருக்கிறது. இராஜஸ் தான் இளைஞர் அமைப்பினர் “திருப்தி” என்கின்ற திட்டத்தினை தொடங்கி வைத்திருக்கிறார்கள். சென்னை ஸ்டான்லி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனையைப் பொறுத்தவரை தினந்தோறும் வருகை தரும் புறநோயாளிகள் 8,000 பேர் வரை நாளொன்றுக்கு பயன் பெறுகிறார்கள். சுமார் 2,000 பேர் உள்நோயாளிகளும் பயன்பெற்று வருகிறார்கள். 

உள்நோயாளிகளுக்கு அரசின் சார்பில் உணவு வழங்கப்படுகிறது என்றாலும் அவர்களுடன் வருகின்ற வர்களுக்கு உணவு என்பது கேள்விக் குறியான ஒன்றுதான். நமது இராஜஸ் தான் இளைஞர் அமைப்பினர் இன்று அந்த திட்டத்தினை இம்மருத்துவ மனையில் தொடங்கி இருக்கிறார்கள். இதன்மூலம் நாள்தோறும் சுமார் 500 உள்நோயாளிகளுடன் வரும் நபர் களுக்கு உணவு தருகின்ற திட்டம் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது.  இங்கு 2,000 உள்நோயாளிகள் வருவ தால் இன்னும் கூடுதலாக உணவு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம். அந்த சங்கத்தினரும் தொடர்ந்து பரிசீலித்து இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் உள்நோயாளி களுடன் உடன் வருபவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை தொடர்வோம் என்று கூறியிருக் கிறார்கள். 

டெங்கு பாதிப்பு விவரம்

டெங்கு காய்ச்சலால் ஒவ்வொரு ஆண்டும் 7.000 முதல் 8,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகபட்ச டெங்கு பாதிப்பு என்பது 2012 ஆம் ஆண்டில் 66 இறப்புகளு டன் 13,000க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு பாதிப்புகள் இருந்தது. அதன் பிறகு அடுத்த அதிகபட்ச பாதிப்பு 2017 ஆம் ஆண்டு 65 இறப்புகளுடன், 23,000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்புகள் இருந்தது. இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக 6,000 அல்லது 7,000 என்கின்ற எண்ணிக் கையில் டெங்கு பாதிப்புகள் ஒவ் வொரு ஆண்டும் இருந்து வந்தது. டெங்கு பாதிப்பு வரவே வராது என்று சொல்ல முடியாது ஏனெனில் ஒவ் வொரு பருவமழைக்கும் அங்கேங்க தேங்கியிருக்கின்ற நன்னீரில் உரு வாகின்ற ஏடிஸ் கொசுக்கள் மூலம் வருகின்றது. குறிப்பாக வீடுகளைச் சுற்றி உடைந்த பானைகள், வாழை மட்டைகள், உடைந்த ஓடுகள், டயர், டியூப் போன்ற பல்வேறு பயன் பெறாத பொருட்களில் தேங்கி இருக் கின்ற நீரில் கூட ஏடிஸ் கொசு உரு வாகி அதன்மூலம் இந்தப் பாதிப்பு ஏற்படுகின்றது. 

எனவே இந்த பாதிப்புகள் இல்லா மல் ஏற்படுகின்ற விழிப்புணர்வை உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ச்சி யாக எடுத்து வருகிறது. தொடர்ந்து கொசு ஒழிக்கும் நடவடிக்கைகளான கொசு மருந்து அடிப்பது, புகை மருந்து அடிப்பது போன்ற செயல்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து தொடர்ந்து அப்பணிகள் நடைபெற்று வருகிறது. டெங்குவி னால் ஏற்படும் உயிரிழப்பு என்பது அந்த நோயினால்   நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது. இதனால் இவர்கள் உடனடியாக மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் காலம் கடந்து மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கு இந்த இறப்புகள் அவ்வப்போது நிகழ்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டினைப் பொறுத்த வரை இதுவரை கடந்த ஜனவரி முதல் தற்போது வரை ஏற்பட்டிருக் கின்ற டெங்கு பாதிப்பு  5,356 ஆகும். இன்றைக்கு சிகிச்சையில் இருப்ப வர்கள் 531 பேர், நேற்றைக்கான (18.10.2023) பாதிப்பு 43 பேர், இதுவரை டெங்குவினால் பாதிப்புக்கு உள்ளாகி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5 என்ற அளவில் உள்ளது. வருகின்ற நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுமார் 1,000 முதல் 1,500 வரை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. காரணம் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக் கப்பட உள்ளது. 

மேலும் கடந்த சில மாதங்களாக வெப்பச்சலன மழை, கோடை மழை தொடர்ந்து கொண்டே இருக்கும் காரணத்தினால் நீர்த்தேக்கம் என்பது ஆங்காங்கே இருந்துக் கொண் டிருக்கிறது. இதனால் இந்த கொசு உற்பத்தி இருக்கிறது என்றாலும் அரசின் சார்பில் கொசுக்களை ஒழிப் பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. அதனால் டெங்கு பாதிப்பு என்பது கட்டுக்குள் இருக் கிறது. இவ்வாறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் அய்ட்ரீம் இரா.மூர்த்தி, பெருநகர சென்னை மாநகராட்சி நகர அமைப்பு தலைவர் இளைய அருணா, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் பாலாஜி, பேராசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment