ராகுல் காந்தி குறித்து அவதூறு பி.ஜே.பி. நிர்வாகி கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 2, 2023

ராகுல் காந்தி குறித்து அவதூறு பி.ஜே.பி. நிர்வாகி கைது

கரூர், அக். 2-  காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குறித்து சமூக ஊடகத்தில் அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ராசிபுரத் தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய் தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத் தைச் சேர்ந்தவர் பிரவீன்ராஜ். பா.ஜ.க. இளைஞரணி சமூக ஊட கப் பொறுப்பாளர். இவர் கடந்த ஆக. 10ஆ-ம் தேதி `எக்ஸ்' தளத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குறித்து அவதூறான கருத் துகளைப் பதிவிட்டதாக கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார் பில், கரூர் சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, பிரவீன் ராஜைத் தேடிவந்தனர். இந்நிலை யில், ராசிபுரம் அருகே முத்து காளிப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இருந்த பிரவீன்ராஜை காவல் துறையினர் கைது செய் தனர்.

பின்னர் அவரை கரூர் அழைத் துச் சென்று, விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல் மாவட்ட பா.ஜ.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment