கல்லூரியில் படிக்கும் மாணவிகள் மட்டுமல்லாமல், குடும்பத் தலைவிகள், பணிபுரியும் பெண்கள் எனப் பலருக்கும் நீச்சல் பயிற்சி நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. இளம் பெண்கள் முதல் முதிய பெண்கள் வரை உடல் சார்ந்த பல பிரச்சினைக்கு நீச்சலும் ஒரு தீர்வாக அமையும்.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை 40 வயதை கடந்தவர்களுக்குத்தான் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள், சுவாசப்பிரச்சினைகள், உடல் பருமன் ஆகியவை ஏற்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் 25 வயதானவர்களுக்கே இத்தகைய பிரச்சினைகள் வருகின்றன. இளம் பெண்களிடமும் தற்போது நீச்சல் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
நீச்சல் பயிற்சி செய்வதால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. நீச்சல் பயிற்சி உடல் பருமனை குறைக்கும். நுரையீரலுக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்தும். 1 மணி நேரம் நீந்தினால் 500 முதல் 800 கலோரிகள் எரிக்கப்படும். உடலின் எல்லா பாகங்களும் வலுப்பெறும். காலி வயிற்றுடனோ, வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டோ நீச்சல் பயிற்சி செய்யக்கூடாது.
நீந்தும் முன், தகுதி பெற்ற பயிற்சியாளரும், தகுதி பெற்ற மீட்பாளர்களும் நீச்சல் குளத்தில் இருக்க வேண்டும். நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீர், சுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்பட வேண்டும். குளோரின் கலந்த நீர் சருமத்தில் படுவதால் நிறம் மாறும்.
இதைத் தவிர்க்க நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு 1 மணிநேரத்துக்கு முன்பாக உடலில் வைட்டமின்-ஏ, இ ஆகியவை அடங்கிய கிரீம்களை பூசிக்கொள்ளலாம். இதனால் சருமம் பாதிக்கப்படாது.
No comments:
Post a Comment