அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, அக் 28- அகில இந்திய மருத் துவ இட ஒதுக்கீட்டிற்கான 86 இடங்கள் நிரப்பப்படவில்லை. 'நிரப் பப்படாமல் இருக்கும் இடங்களை கலந்தாய்வு நடத்தி நிரப்ப வேண்டும், இல்லையென்றால் மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கு தரவேண்டும்' என்று ஒன் றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு இதுவரை பதில்கள் இல்லை மருத் துவ ஆணையத்தின் இந்த பாரபட்சமான நடவடிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றம் செல்வோம் என்று மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள் ளார்.
மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இலச்சினை வெளியீட்டு விழா, சென்னையில் (26.10.2023) நடை பெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், இலச்சினையை வெளியிட் டார். அப்போது அவர் கூறியதாவது:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை சார்பில் சட்டமன்றத்தில், 'தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்ககம் தற்போது 36 மருத்துவக்கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் அதனை சார்ந்த மருத்துவ நிலையங்களின் செயல் பாடுகளை உள்ளடக்கியதாக உள்ளது. மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக மருத்துவக் கல்வி இயக்ககம், இனி வருங்காலங்களில் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் என்ற பெயரில் செயல்படும்' என்று அறிவிக்கப் பட்டது. கடுமை யான நோய்களில் இருந்து மக்களை காப்பது, நோய் வராமல் தடுப்பது போன்ற ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை மேற் கொள்ளவும் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககமாக தரம் உயர்த்தப் பட்டு, 'இலச்சினை' அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 6 இளங்கலை மருத்துவ இடங்கள் கடந்த ஆண்டு நிரப்பப்படாமல் இருந்தன. நடப்பு ஆண்டு, 86 இடங்கள் நிரப்பப் படவில்லை. 'நிரப்பப்படாமல் இருக் கும் இடங்களை கலந்தாய்வு நடத்தி நிரப்ப வேண்டும், இல்லையென்றால் மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கு தர வேண்டும்' என்று ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு இது வரை பதில்கள் இல்லை.
துறையின் செயலாளர் இதுதொடர் பாக ஒன்றிய அரசிடம் பேசிக்கொண்டி ருக்கிறார். இந்த நிலையில், முதலமைச் சரின் அறிவுறுத்தலை பெற்று, உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடர்வதற் கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கிறோம், விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment