பள்ளிப் பாட நூல்களில் பாரத் பெயர் மாற்றமா? வைகோ கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 28, 2023

பள்ளிப் பாட நூல்களில் பாரத் பெயர் மாற்றமா? வைகோ கண்டனம்

சென்னை, அக். 28- : ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 26.10.2023 அன்று வெளியிட்ட அறிக்கை:

பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தி யாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சி இஆர்டி) உயர்நிலைக் குழு பரிந்துரைத் துள்ளது. 

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 

1-இல், “இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக அரசு ‘பாரத்’ என்பதை மட்டுமே அதிகாரப்பூர்வ பெயராக மாற்ற முடிவு செய்தால், அவர்கள் அரசமைப்பின் 

1-ஆவது பிரிவைத் திருத்துவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறி முகப்படுத்த வேண்டும். அரசமைப்பின் பிரிவு 1-இல் மாற்றம் கொண்டுவருவது உட்பட அரசமைப்பின் மிக முக்கிய மாற்றங்களுக்கு, அவையில் இருக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் சிறப்புப் பெரும் பான்மை (66%) தேவை என தெரிவிக்கப் பட்டு உள்ளது. 

எனவே, இந் தியா என்ற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்றால், அவையில் 66 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இரு அவை களிலுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்ட ணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை. 

நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக் காத ஒன்றிய பா.ஜ.க. அரசு, நாடாளு மன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வராமலேயே இந்தியாவின் பெயரை பாரத் என்று நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது. 

என்.சி.இ.ஆர்.டி., பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கு முயற்சிப்பது அதன் அதிகார வரம்பை மீறியது மட்டு மல்ல, சட்ட நெறிமுறைக ளையும் மீறிய செயலாகும். கடும் கண்ட னத்துக்குரிய இந்தப் பரிந்துரையை ஏற்கக் கூடாது. 

இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.

No comments:

Post a Comment