'சமூக ஊடகங்களில் ஆசிரியரை பின் தொடர்வோம்' என்ற திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணனின் கடிதம் ('விடுதலை' - 14.10.2023) இந்த நேரத்தில் அவசிய மான ஒன்று. சமூக ஊடகங்கள் புதிய நிலம் என்பதால் இவையும் வந்தேறி பார்ப்பனர்களின் வேட்டைக்காடாகி விட்டது. இங்கு குடியேறிதுண்டு போட்டு இடம்பிடிப்பது போல ஆக்கிரமித்து விட்டனர். அதிலும் கோரா என்றொரு வலைதளத்தில் அவர்களது கொட்டம் தாள முடியவில்லை.அய்ந்து கோடி பேர் அய்ந்து அய்ந்து காசு திருடுவது போல திரும்பத்திரும்ப தந்தை பெரியார் திருமணம், தந்தை பெரியார் அவர்களின் சொத்து இளமைப் பருவம் இவற்றைப் பற்றிக் கேட்டு கேட்டு அவரைப்பற்றிய தவறான பிம்பத்தை கட்டமைக்க முயல்கிறார்கள். நான் உட்பட சிலர் நேர விரையத்தையும், சலிப்பையும் பொருட்படுத்தாமல் பதிலடி கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். ஒரே கருத்தைத் தாங்கிய கேள்வி வெவ்வேறு வடிவத்தில் வெவ்வேறு நபர்களால் கேட்கப்பட்டு வருவதை தடுத்துக் கொண்டு வருகிறோம். கழகத் தோழர்கள் இந்த வலை தளத்தின் பாலும் தங்கள் கருத்துக் கணைகளை பாய்ச்ச வேண்டுகிறேன்.
- ஜி.அழகிரிசாமி, மயிலாடுதுறை மாவட்டம்
No comments:
Post a Comment