ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்!
சென்னை, அக்.27 - ஆரியம் - _திராவி டம் பற்றி உளறி வர லாற்றை அழிக் கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று ம.தி.மு.க. பொதுச் செய லாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அறிக்கை வருமாறு:
திருச்சியில் உள்ள தனியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தின் சார் பில், மருது சகோதரர்கள் நினைவு நாள் விழா 24.10.2023 அன்று நடை பெற்றது. இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசிய போது, “தமிழ்நாட்டின் உண்மை யான வரலாற்றை அழிப்பதற்கு இங்கு தொடர்ச்சி யான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. உண்மை யான வரலாற்றை மறைத்து அதற்கு நிகரான வரலாற்றை எழுத முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள், தமிழ்நாட்டில் இன ரீதியாக பிரிவினை இருப் பது போன்றதொரு தவறான தகவலை உருவாக்கினார்கள்.
திராவிடம், ஆரியம் என்ற இனங்கள் இருப்பது போன்ற பிரிவை உருவாக்கினார்கள். திராவிடர்கள் என்பவர்கள் தனி இனம் என்ற கருத்தாக்கத்தின் தந்தை ராபர்ட் கால்டுவெல். உண்மையில் இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது. இந் தியாவைப் பிரித்தாளும் சூழ்ச்சிக் கான பிரிட்டிஷாரின் உத்திகளில் இதுவும் ஒன்று.
இன்றளவும் கொண்டாடப் படும் சிலர், லண்டனுக்குச் சென்று பிரிட்டி ஷாரிடம் இந்தி யாவுக்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதெல் லாம் மறைக்கப்பட்ட வரலாறு” என்று பேசி உள்ளார். தமிழ்நாட் டின் வரலாற்றை அறியாமல் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என். ரவி உளறிக் கொட்டி வருவதில் இதுவும் ஒன்றாகும்.
ரிக் வேதம், அவ்வேதத்திற்குச் சொந்தக்காரர்களை ‘ஆரியர்’ என்றும் மற்றவர்களை ‘அனா ரியர்’ என்றும் குறிப்பிடுகிறது. ஆரியரை எதிர்த்த மக்களை ‘தாசர்’ என்று குறிப்பிடுகிறது. தோற்கடிக்கப்பட்ட அனாரியர் (ஆரியர் அல்லாதவர்) சமூகத் தின் நாலாம் பிரிவாக சூத்திரர் (Sudra) ஆக்கப்பட்ட சூத்திரர் களும் இழிந்த பிரிவினர் ஆவர்.
அனாரியர் என்றும், தாசர் என்றும், அசுரர் என்றும் பின்னர் வர்ண ஜாதி முறையில் சூத்திரர் - பஞ்சமர் என்றும் ஒடுக்கு முறைக்கு இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் உள்ளாகி உள்ளமைக்கு இலக் கியப் பதிவுகள் இருக்கின்றன.
‘திராவிட’ என்ற சொல் மகா பாரதத்தில் வருகிறது. அது தென் னகப் பகுதியைக் குறிக்கப் பயன் படுத்தப்பட்டு இருக்கிறது.
திராவிடர் பற்றி மனுதர்மம் பேசுகிறது. மனு சாஸ்திரத்தில் (X,43, 44) ஜாதி இறக்கம் செய்யப் பட்ட சத்திரியர்களைப் பற்றி வருகிறது. திராவிடர்கள் சத்திரியர்களாக இருந்தனர் என்றும், பின்னர் விரு சாலர்களாக (சூத்திரர்கள்) தாழ்ந் தார்கள் என்றும், “திராவிடச் சத்திரி யர்கள், 'புனித' நிகழ்வுகளை விட்டு விட்டனர் என்றும், அதனா லேயே தாழ்ந்தார்கள்'' என்றும் மனுநூல் குறிப்பிடுகிறது.
இந்தியத் துணைக் கண்டத்தின் தென்பகுதியை ‘திராவிடம்’ என்று வடமொழியாளர்கள் அழைக்கும் போக்கு நீண்ட காலமாக, நூல்களில் பேசப்பட்ட ஒன்றாக இருந்து வந் திருக்கிறது.
தமிழ் மொழி ‘திராவிடம்’ என்று வடவர்களால், சமஸ் கிருதம் பேசிய ஆரியர்களால் அழைக்கப்பட்டது. தமிழ் அறிஞர்களே தமிழை ‘திரா விடம்’ என்று அழைக்கும் போக்கு கி.பி. 17ஆம் நூற்றாண்டு அளவிலே பரவலானது. கி.பி. 17ஆம் நூற் றாண்டில், தாயுமானவர் தமிழைத் ‘திராவிடர்’ என்று குறிப்பிடுகிறார்.
கால்டுவெல்லின் ஒப்பிலக் கணம் (1856) வெளி வரும் முன்பு, தமிழ்மொழி ‘திராவிடம்’ என்றே தமிழறிஞர்களால் வழங்கப்பட் டது. இந்த வரலாறுகளை மறைத்து ஆர்.எஸ்.எஸ் என்ன கட்ட மைக்கிறதோ அதனை விளம்பரம் செய்யும் முகவராக ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.
ஆங்கிலேயர்களின் தாள் வணங்கி, ஏகாதிபத்திய வெள்ளை அரசின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக் கிடந்த கூட்டத்தைக் கொண் டாடும் ஆளுநர் ரவியிடம் இது போன்ற கருத்துகளைத்தான் எதிர் பார்க்க முடியும். அவை ஒரு போதும் உண்மை ஆகாது.
-இவ்வாறு வைகோ தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment