காவிரி நீரைத் திறந்துவிட மறுப்பதா? ஒன்றிய அரசு, கருநாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் வெடித்த போராட்டம்: தஞ்சையில் முழு அடைப்புப் போராட்டம்- திருச்சியில் ரயில் மறியல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 11, 2023

காவிரி நீரைத் திறந்துவிட மறுப்பதா? ஒன்றிய அரசு, கருநாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் வெடித்த போராட்டம்: தஞ்சையில் முழு அடைப்புப் போராட்டம்- திருச்சியில் ரயில் மறியல்!

தஞ்சாவூர்,அக்.11- கருநாடக அரசை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (11.10.2023) காலைமுதல் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை தர மறுக்கும் கருநாடகா அரசை கண் டித்தும், உடனடியாக மாதந்தோறும் வழங்கவேண்டிய தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், கருநாடகாவில் விவசாயிகள் மற்றும் அமைப்பு களிடம் போராட்டத்தைத் தூண்டி விடும் பாஜகவை கண்டித்தும், காவிரி விவகாரத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வரும் ஒன்றிய அரசைக் கண்டித்தும் தஞ்சை, நாகை, திரு வாரூர் உள்ளிட்ட ஒன்பது மாவட் டங்களில் இன்று காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பாக ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதனால் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதி களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்க், பால் உள்ளிட்ட அத்தியாவசிய  கடைகள் மட்டுமே திறந்துள்ளன.

இந்தப் போராட்டத்துக்கு ஆதர வாக வணிகர்கள் மற்றும் காய்கறிக்கு சந்தைகள் - மார்க்கெட்டுகள் என அனைத்துக் கடைகளும் அடைக் கப்பட்டுள்ளன.

திருச்சியில் 300 பேர் கைது

திருச்சியில் போராட்டத்தில் ஈடு பட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டி யக்கம் மற்றும் திமுக கூட்டணி கட்சி கள் சார்பில் இன்று (11.10.2023) மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் விவசாய சங்கத்தினர், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் என நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.  

உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப் பின்படி, தமிழ்நாட்டுக்கு உரிய தண் ணீரை கருநாடக அரசு திறந்து விட வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், மாவட்டத்தில் கடைகள் அடைக் கப்பட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment