அன்புக்குரிய சொந்தங்களே பிரதமர் மோடி அவர்களைப் பார்த்து நாம் என்ன கேட்கிறோம்? பிரதமர் மோடி அவர்களே எங்களுக்குச் செய்றேன்னு நிறைய வாக்குறுதிகளை கொடுத்தீர்களே, அதைச் செய்யாமல் வேறு எதையெதையோ செஞ்சிட்டு இருக்கீங்களே, இது நியாயமா? இவரு என்னென்ன சொன்னாரு? ‘நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் பொத்துன்னு வந்து விழும்' என்றார். இதை நம்பி எளிய மக்கள் கையில் வைத்திருந்த ரூ.500, ரூ.1000 பணத் தைக் கொண்டு போய் வங்கியில் கணக்கு தொடங்கிட் டாங்க. இதுவரைக்கும் மோடி 15 லட்சம் ரூபாய் போட் டாரா? போடவில்லை. மக்கள் போட்ட ரூ.500, ரூ.1000-ம் போச்சு. இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் போட்ட பணம் எவ்வளவு இருக்கும்? மோடி அவர்களே, ‘15 லட்சம் ரூபாய் போடறேன்னு சொல்லிட்டு, நீட், விஸ்வகர்மா யோஜனா ன்னு எதையெதையோ கொண்டு வர்றீங்களே’ என்று நீங்கள் கேட்க வேண்டும். அப்புறம் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கிறேன்னு சொன்னாரு. கொடுத்தாரா? இல்லையே. இருக்கிற வேலை யையும் பறித்துக்கொண்டார். 9 ஆண்டுகள் ஆயிடுச்சு. 18 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்கவேண்டும். சொன்னீங்களே, செஞ்சீங்களா ன்னு நீங்க கேட்கணும்.
அப்புறம் பெட்ரோல்? ஒரு லிட்டர் பெட்ரோல் 40 ரூபாய்க்கு கிடைக்கும் என்று சொன்னீர்களே, செய்தீர் களா? என்று கேட்க வேண்டும். 200 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் கிடைக்கும் என்றீர்களே, செய்தீர்களா? என்று கேட்க வேண்டும். பண வீக்கத்தை கட்டுப்படுத்துவேன் என்றீர். செய்தீரா? நீங்கள் இதைக் கேட்க வேண்டும். விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவேன் என்று சொன்னாரே, செய்தாரா? இல்லை. தண்ணீர் தட்டுப் பாடு போக்க நதிகளை இணைப்போம் என்று சொன்னார், செய்தாரா?
சொன்னதை எதையும் செய்யவில்லை. மக்கள் வறுமையில் இருக்கும் போது ரூ.10 லட்சத்தில் உடை உடுத்துகிறார். இப்படிப்பட்ட மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றுதான் தமிழர் தலைவர் ஆசிரியர் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்து வருகிறார். ஆகவே 2024 தேர்தலில் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுங்கள்.
(முனைவர் துரை. சந்திரசேகரன்,
புதுச்சேரி - 26.10.2023)
No comments:
Post a Comment