ஒன்றிய அரசைக்கண்டித்து மதிமுக போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 11, 2023

ஒன்றிய அரசைக்கண்டித்து மதிமுக போராட்டம்

சென்னை, அக்.11 ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 

உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி காவிரியில் கருநாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், தமிழ் நாட்டிற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என கருநாடகத்தில் போராட்டம் நடத்தி வரும் பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகளை கண்டித்தும், எஞ்சிய குறுவைப் பயிரை பாதுகாத்திட, சம்பா சாகுபடியைத் தொடங்கிட தமிழ் நாட்டிற்கு வழங்கவேண்டிய தண்ணீரைத் திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்திய பின்பும் பாராமுகமாக செயல் படும் ஒன்றிய  பா.ஜ.க. அரசை கண்டித்தும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு நிதியை குறைத்தும், மாநிலங்களுக்கு நிதியை விடுவிக்காமலும் அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்தும் ம.தி.மு.க. சார்பில் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் வருகிற 16.10.2023 அன்று காலை 10 மணிக்கு திருச்சி மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  

காவிரியில் நமது மரபு உரிமையை நிலைநாட்டவும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பாதுகாக்கவும் ம.தி.மு.க. நடத்தும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள், விவசாய தொழிலா ளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், வர்த்தகப் பெரு மக்கள் மற்றும் பொதுமக்கள் பேராதரவை வழங்க வேண்டும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment