விசாகப்பட்டினம், அக்.2 ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் பன்றி யின் சிறுநீர கத்தை மனிதனுக்கு மாற்றுவது குறித்து சிறுநீரக மருத்துவர் வசிஷ்டா ததாபுடி கருத்து தெரிவித்துள்ளார். இவர் அமெரிக் காவில் உள்ள நியூயார்க்கின் லாங்கோன் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப் பட்டினத்தில் சொசைட்டி ஆஃப் நெப் ராலஜியின் ஆறாவது ஆண்டு மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் மருத்துவர் வசிஷ்டா கலந்து கொண்டு பேசினார். அப்போது பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு மாற்றுவது தொடர்பான சாத்தியம் குறித்து அவர் பேசி இருந்தார். அண்மையில் மரபணு ரீதியாக ஒழுங் குப்படுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனித உடலுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் மாற்றம் செய்ததில், அது இயல்பான நிலையில் இரண்டு மாத காலம் வரை செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து இன்னும் சில ஆய்வுகள் மேற் கொள்ளப்பட உள்ளதாக வும். அதன் பிறகே இது மருத்துவ சிகிச்சை முறையில் வழக்கத்துக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் எதிர் காலத்தில் உறுப்பு மாற்று சிகிச்சை முறையில் மாற்றம் காண முடியும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் சுமார் 150 பேர் பங்கேற்றிருந்தனர்.
No comments:
Post a Comment