முதலமைச்சரின் பொது நிவாரண நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 17, 2023

முதலமைச்சரின் பொது நிவாரண நிதி

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (16.10.2023), சென்னை, சைதாப்பேட்டையில், கனமழையின் காரணமாக பெட்ரோல் பங்கின் மேற்கூரை இடிந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து, ஒரு வாரத்திற்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 நபர்களுக்கு தலா ரூ.12,700/-, 3 நாள்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற  3 பேருக்கு தலா ரூ.4,300/-, விபத்தில் இறந்த ஒருவரின் குடும்பத்தினருக்கு ரூ.4,00,000/- வழங்கினார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துரைராஜ், மத்திய சென்னை வருவாய் கோட்டாச்சியர், கியூரி, மாம்பலம் வட்டாச்சியர் பாலாஜி பாரதி, மாமன்ற உறுப்பினர் சிறீதரன், மோகன்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment