ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 16, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

16.10.2023

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பிரதமரின் ஓபிசி அந்தஸ்து குறித்த “பொய்” அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் நரேந்திர மோடி அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குவதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நடைமுறைப்படுத்தவும், பெண்களுக்கு எதிரான பாகு பாடு மற்றும் ஓரங்கட்டப்படுவதை தகர்க்கப் பாடுபடப் போவதாகவும் சோனியா உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள், சென்னையில் நடத்திய பெண்கள் உரிமை மாநாட்டில் உறுதி ஏற்றனர்.

எகனாமிக் டைம்ஸ்:

* ம.பி. தேர்தலில் காங்கிரஸ் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என அக்கட்சியின் தேர்தல் பிரச்சார தலைவர் ஜிது பட்வாரி நம்பிக்கை.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment