கோடிக்கணக்கான சொத்துக்கு வாரிசாக இருக்கும் பணக்கார பிள்ளைகள்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 28, 2023

கோடிக்கணக்கான சொத்துக்கு வாரிசாக இருக்கும் பணக்கார பிள்ளைகள்...

ஃபோர்ப்ஸின் 2023 உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவில் இருந்து 169 பில்லியனர்கள் இடம்பெற்றுள்ளனர்.  இதன் மூலம் உலகின் மிகவும் பிரபலமான சில கோடீஸ்வரர்களின் தாயகம் இந்தியா என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்), கவுதம் அதானி (அதானி குழுமம்), சைரஸ் பூனவல்லா (சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா), ஷிவ் நாடார் (HCL டெக்னாலஜிஸ்), சாவித்ரி ஜிண்டால் போன்ற இந்தியாவின் பிரபலமான கோடீஸ்வரர்களில் சிலர் அடங்குவர். இந்த பெரும்பணக்காரர்கள் பற்றி நமக்கு ஏற்கெனவே பல விஷயங்கள் தெரிந்திருக்கும். எனவே இந்தியாவின் பணக்காரக் குழந்தைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முகேஷ் அம்பானியின் பிள்ளைகள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 7.5 லட்சம் கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. இவர் நீட்டாவை மணந்தார், அவர்களுக்கு இஷா அம்பானி பிரமல், ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில், இஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஏற்கெனவே வணிக உலகில் தங்களுக்கு ஒரு பெயரை உருவாக்கியுள்ளனர்.

இஷா அம்பானி ஜியோவின் இயக்குநராக பணிபுரிகிறார். ரிலையன்ஸின் ஆன்லைன் ஃபேஷன் போர்ட்டலான ஜியோமார்ட்டின் மூளையாக இருக்கிறார். மறுபுறம், ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோவின் தலைவரான ஜியோ இன்ஃபோகாமின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார். முகேஷ் மற்றும் நீட்டா அம்பானியின் மூன்றாவது குழந்தையான ஆனந்த் அம்பானியும் தனது மூத்த சகோதரர் ஆகாஷ் அம்பானியின் வழிகாட்டுதலின் கீழ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

கவுதம் அதானியின் மகன்கள்

பிரபல இந்திய தொழிலதிபர், கவுதம் அதானி இந்தியாவின் இரண்டாவது பணக்காரர் ஆவார். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 4.30 லட்சம் கோடி. கவுதம் அதானியின் மனைவி ப்ரீத்தி அதானி. இந்த இணையருக்கு கரண் அதானி மற்றும் ஜீத் அதானி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கரண் அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் நிலையில், ஜீத் அதானி குழுமத்தின் நிதித்துறையின் துணைத் தலைவராக உள்ளார். இருவரும் தங்கள் தந்தையின் பாரம்பரியமான அதானி குழுமத்தை ஒரு உச்ச நிலைக்கு கொண்டு செல்வதற்காக அந்தந்த நிலைகளில் கடுமையாக மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

சைரஸ் பூனவல்லாவின் மகன்

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான சைரஸ் பூனவல்லா இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர். பிரபல தொழிலதிபரின் நிகர மதிப்பு ரூ. 1,85,000 கோடி. அவருக்கு ஆதார் பூனவல்லா என்ற மகன் உள்ளார், அவர் 2011 இல் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற பயோ டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்றார். தனது புதிய உத்திகள் மூலம் நிறுவனத்தி வருவாயை பன்மடங்கு அதிகரித்தார்.

திலிப் சாங்வி பிள்ளைகள்

பத்மசிறீ விருது பெற்ற திலிப் ஷாங்வி இந்தியாவின் பணக்கார தொழில் முனைவோர்களில் ஒருவர். சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநராக உள்ளார். திலீப்பின் நிகர மதிப்பு சுமார் ரூ. 1.46 லட்சம் கோடி. அவர் விபா டி ஷாங்வியை மணந்தார், அவர்களுக்கு விதி ஷங்வி மற்றும் ஆலோக் ஷாங்வி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். விதி மற்றும் அலோக் தொழில் வல்லுநர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Fogg, Moov  போன்ற அய்கானிக் பிராண்டுகளின் மூளையாக இருந்த தர்ஷன் பட்டேல்.. அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

லட்சுமி மிட்டலின் பிள்ளைகள்

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் லட்சுமி மிட்டல்.  'இந்தியாவின் ஸ்டீல் மேக்னேட்' என்று அழைக்கப்படும் லக்ஷ்மி மிட்டல், உலகின் இரண்டாவது பெரிய எஃகு தயாரிப்பு நிறுவனமான ஆர்சிலர் மிட்டலின் தலைவராக இருக்கிறார். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,620 கோடி. லக்ஷ்மி மிட்டல் உஷா மிட்டலை மணந்தார். இவர்களுக்கு வனிஷா மிட்டல் மற்றும் ஆதித்யா மிட்டல் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வனிஷா ஆர்சிலர் மிட்டலின் இயக்குநர் குழுவில் ஒருவராக உள்ள நிலையில், ஆதித்யா அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

ராதாகிஷன் பிள்ளைகள்

பிரபல தொழிலதிபர், முதலீட்டாளர், பங்கு வர்த்தகர் மற்றும் இந்தியாவில் டிமார்ட்டை வாங்கிய ராதாகிஷன் தமானி இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ. 1,580 கோடி. ராதாகிஷன் சிறீகாந்தாதேவி தமானியை மணந்தார், அவர்களுக்கு மஞ்சரி தமானி, ஜோதி கப்ரா மற்றும் மது சந்தக் என மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களும் தங்கள் பில்லியனர் தந்தையைப் போலவே ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புவதால், அவர்களைப் பற்றி இணையத்தில் அதிக தகவல்கள் கிடைக்கவில்லை.

குமார் மங்கலம் பிர்லாவின் பிள்ளைகள் : 

பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸின் அதிபர் குமார் மங்கலம் பிர்லா, இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் பெரும் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவர். உலகளவில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் ஆவார். தொழிலதிபர் நீரஜா பிர்லாவை மணந்தார், அவர்களுக்கு அத்வைதேஷா பிர்லா, ஆர்யமான் பிர்லா மற்றும் அனன்யா பிர்லா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

அத்வைதேஷா பிர்லா ஒரு கல்வியாளர் மற்றும் மாதவிடாய் சுகாதார முயற்சியான உஜாஸின் நிறுவனர் ஆவார். அடுத்த வரிசையில் கிரிக்கெட் வீரர் மற்றும் ஃபேஷன் ஆர்வலரான ஆர்யமான் பிர்லா உள்ளார். 2023 ஆம் ஆண்டில், ஆதித்ய பிர்லா ஃபேஷன் மற்றும் சில்லறை விற்பனையின் இயக்குநர்களில் ஒருவராக ஆர்யமான் நியமிக்கப்பட்டார். அனன்யா பிர்லா ஒரு புகழ்பெற்ற பாடகி, பாடலாசிரியர், தொழில்முனைவோர் மற்றும் பேஷன் இன்ப்ளூயன்சராக இருக்கிறார். 

உதய் கோடக்கின் மகன்

கோடீஸ்வர வங்கியாளரான உதய் கோடக், கோடக் மஹிந்திரா வங்கியின் செயல் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். இன்று இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் உதய் கோடக்கின் நிகர மதிப்பு ரூ. 1,310 கோடி. வர் பல்லவி கோடக்கை மணந்தார், அவர்களுக்கு ஜெய் கோடக் என்ற மகன் உள்ளார். ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் விஙிகி பட்டம் பெற்ற ஜெய் கோடக் தற்போது கோடக் மஹிந்திரா வங்கியின் துணைத் தலைவராக உள்ளார்.

அசிம் பிரேம்ஜியின் பிள்ளைகள் : 

அசிம் பிரேம்ஜி என்று அழைக்கப்படும் அசிம் ஹாஷிம் பிரேம்ஜி, விப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகமற்ற உறுப்பினர் மற்றும் நிறுவனத் தலைவர் ஆவார்.  அசிம் பிரேம்ஜியின் சொத்தின் நிகர மதிப்பு ரூ. 920 கோடி. அசிம் பிரேம்ஜி யாஸ்மீன் பிரேம்ஜியை மணந்தார், அவர்களுக்கு ரிஷாத் பிரேம்ஜி மற்றும் தாரிக் பிரேம்ஜி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரிஷாத் விப்ரோ லிமிடெட்டின் தலைவராக இருக்கும் அதே வேளையில், தாரிக் விப்ரோ லிமிடெட்டின் நிர்வாகமற்ற இயக்குநராகவும், துணைத் தலைவராகவும் உள்ளார்.


No comments:

Post a Comment