கன்னியாகுமரி, அக்.3- நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது
. மாநில பகுத்தறிவாளர்கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் மோகன் விஸ்வநாதன், அமைப்பாளர் ரிஜிசி குருசாமி ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கி உரை யாற்றினார். கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்டத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக்நியூட்டன், இளைஞரணி மாவட்டத் தலைவர் இரா.இராஜேஷ், செயலாளர் ச.அலெக்சாண்டர், பகுத்தறிவாளர்கழக மாவட்ட செயலாளர் பெரியார்தாஸ், மாநகர துணைத்தலைவர் கவிஞர் செய்க்முகமது, கழகத் தோழர்கள் மு.குமரிச்செல்வர், பா.சு.முத்துவைர வன், செல்லையன், மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்கள் மாவட்டத் துணைத் தலைவர் டாக்டர் இலா. அருள் அமலன், துணைச் செயலாளர் சி.மகாராசன், மாநகர அமைப்பாளர் சு.பெருமாள்.
அரசு நிகழ்ச்சிகளில் மதவழிபாடுகள், ஆயுத பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்த தடைவிதிக்கவும் அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் வகையில் மீண்டும் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவரும் மோடிஅரசைக் கண்டித்தும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகத்திற்கு அதிக உறுப்பினர்களைச் சேர்க்கவும், பயிற்சிப் பட்டறை ஒன்றிய அளவில் கருத்தரங்கங்கள் , கலந்துரையாடல் கூட்டங்கள், பள்ளி, கல்லூரிகளில் அறிவியல், விழிப்புணர்வு பரப்புரை கூட்டங்கள் நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நாகர்கோவில் ஒழுகினசேரியில் தந்தை பெரியாருடைய சதுக்கம் அமைக்கவும், கவிமணி தேசிய விநாயகம் அவர்களுடைய மணிமண்டப பணியை விரைவுபடுத்தவும், தமிழ்நாடு அரசுக்கு குமரிமாவட்ட பகுத்தறிவாளர்கழகம் கோரிக்கை வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment