அரசு மருத்துவமனை அருகிலேயே மருத்துவர்கள் வசிக்க வேண்டும் கருநாடக மாநில அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

அரசு மருத்துவமனை அருகிலேயே மருத்துவர்கள் வசிக்க வேண்டும் கருநாடக மாநில அரசு உத்தரவு

பெங்களூரு,அக்.25- 'அரசு மருத்துவ மனைகளில், பணியாற்றும் மருத்துவர் கள் அருகிலேயே வசிக்க வேண்டும்' என, கருநாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனையின், பல மருத் துவர்கள் தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றுகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளி களுக்கு, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர் களில் பலரும் நகர்ப்பகுதிகளில் வசிக் கின்றனர். இங்கிருந்து பணிக்காக கிரா மங்களுக்கு வந்து செல்கின்றனர். யாருமே கிராமங்களில் வசிப்பதில்லை.

இந்நிலையில் பெங்களூரு ரூரல் மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த அறிக்கை:

பொது மக்களுக்கு, தேவையான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும். சுகாதாரம், குடும்ப நலத் துறை அவசர சேவைகள் எல்லைக்கு உட்பட்டது.

ஆனால், அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் இருப்பதில்லை என, புகார்கள் வந்துள்ளன. சரியான நேரத் தில் சிகிச்சை கிடைக்காமல், நோயாளி கள் உயிரிழந்த உதாரணங்களும் உள்ளன.

பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மய்யங்களின் அருகில், அனைத்து வசதிகள் உள்ளன. ஆனால் அடிப்படை வசதிகள் இல்லையென, காரணம் கூறி நகர்ப்பகுதிகளில் வசிக்கின்றனர். இனி மத்திய இடங்களில் வசிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment