தர்மபுரி, அக். 31- தருமபுரி மாவட்டம் மாரவாடி பீம. வி. பி.சிங் - ந. நித்தியா (ஊமை ஜெயராமன் தமிழ்ச்செல்வி குடும்பத்தினர்) ஆகியோரது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா 29-.10.2023ஆம் தேதி பிற்பகல் 2:00 மணிக்கு தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அவர்கள் மாலை அணிவித்தார்.
திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமையேற்று நிகழ்ச்சி ஒருங் கிணைத்து நடத்தினர். திராவிடர் கழக மகளிர் அணி அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி வரவேற்பு உரையாற்றினார். திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கேக் வெட்டி குழந் தைக்கு ஊட்டிய பின் அனைவரது கைத்தட்டல்களுக்கு இடையே அன்புமதி என பெயர் சூட்டினார்.
குழந்தை அன்புமதியை வாழ்த்தி மருத்துவர் கே. ஆர்.பிர காசம், மதுரை இந்தியன் அக் ரோஸ் உரிமையாளர் பாண்டிய ராஜன், தொலைத்தொடர்பு ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர் கே. மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கி.கோவேந்தன், திமுக மாநில ஆதிதிராவிட நல குழு செய லாளரும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்மான அரூர் சா. இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் குடும்பத்தி னர்கள் ஊமை. பீமன், அருணா, வள்ளி, சக்கரை சின்ன பாப்பா, கணேசன், டாக்டர் சந்திரபோஸ் அம்பேத்கர், டாக்டர் ஆர்த்தி, டாக்டர் கனிமொழி, மதிக்கண் ணன், அருள்மதி, பிரபாகரன், கயல்விழி, ஆகியோரும் திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட கழக தலைவர் கு. சரவணன், கழக காப் பாளர் அ.தமிழ்செல்வன், பொதுக் குழு உறுப்பினர் கதிர், வீ.சிவாஜி, மண்டல ஆசிரியர் அணி செயலா ளர் இர.கிருஷ்ணமூர்த்தி,, மகளிர் அணி பொறுப்பாளர் சங்கீதா, மாவட்ட விவசாய தலைவர் மு. சிசுபாலன், மாவட்ட பகுத்தறிவா ளர்களாக தலைவர் கதிர் செந்தில் குமார், மாவட்ட இளைஞர் அணி தலைவர் மா.முனியப்பன், விடு தலை வாசகர் வட்ட செயலாளர் சுதாமணி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்ல துரை, மேனாள் மாவட்ட தலை வர் இளைய மாதன், நகரத் தலை வர் கரு.பாலன், தொழிலாளர் அணி செயலாளர் மாணிக்கம், க.கலைமணி, அரூர் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் பில வேங்கன், துரைராஜ் காமலாபுரம் ராஜா, ஊற்றங்கரை ஒன்றிய தலைவர் பொன்முடி மகளிர் அணி இந்திரா காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment