டேக்வாண்டோ போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 8, 2023

டேக்வாண்டோ போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிகளுக்கு தங்கப்பதக்கம்

திருச்சி, அக். 8- திருச்சி டக்வாண்டோ கூட்டமைப்பு சார்பில் 28.09.2023 அன்று பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருத்துவ ஆய்வுக்கூட தொழில் நுட்பநர் மற்றும் மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் மொத்தம் 8 பேர் கலந்து கொண்டு தனி நபர் போட்டியில் தலா 1 தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களையும் குழுப் போட்டியில் தலா 3 தங்கப்பதக்கங்கள் மற்றும் வெள்ளிப்பதக்கங்களையும் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

மாவட்ட அளவில் நடைபெற்ற இப் போட்டியில் தனிநபர் பிரிவில் மருந்தியல் பட்டயப்படிப்பு மாணவி செ. ஆர்த்தி தங்கப்பதக்கத்தினையும் மாணவி ச. ஆர்த்தி வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றனர். குழுப் போட்டியில் ஆய்வுக்கூட தொழில் நுட்பர் துறை மாணவிகள் கே. விஷ்ணுப்ரியா, ஆர்.வர்சனா மற்றும் எஸ். லலிதா ஆகியோர் கலந்து கொண்டு  தங்கப்பதக்கத்தினை பெற்றனர். மருந்தி யல் பட்டயப் படிப்பு மாணவிகள் எஸ். மாதவி, ஆர்.பி. வேதவர்சினி மற்றும் ஆய்வுக்கூட தொழில் நுட்பர் மாணவி கே. பவித்ராஆகியோர் வெள்ளிப் பதக்கத்தினை தட்டிச் சென்றனர்.

பதக்கங்கள் வென்ற மாணவிகளுக்கு கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.  

No comments:

Post a Comment