கேரளாவிலும் சிறப்பு கல்விக் கொள்கை உருவாக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 16, 2023

கேரளாவிலும் சிறப்பு கல்விக் கொள்கை உருவாக்கம்

சென்னை,அ.16- கேரளா விலும் சமூக நீதியை மய்யமாக கொண்டு பிரத்யேக கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள் ளதாக அந்த மாநிலத்தின் அமைச்சர் பிந்து தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கை -2020 அமல்படுத்துவதை எதிர்த்து ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கல்வி பாதுகாப்பு மாநாடு சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில் நேற்று (15.10.2023) நடைபெற் றது. இதற்கு பல்கலைக்கழக ஆசி ரியர் சங்கத்தின் தலைவர் ஜெ. காந்திராஜ் தலைமை தாங் கினார்.

இந்த மாநாட்டில் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி 10 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன. மேலும், கேரள மாநில உயர்கல்வி மற்றும் சமூக நீதித்துறை அமைச்சர் ஆர். பிந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப் புரையாற்றினார். 

மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

தேசிய கல்விக் கொள் கையில் உள்ள ஒரு அம்ச மானது மாணவர்கள் முத லாம் ஆண்டே கல்லூரியை விட்டு வெளியேற வழிவகை செய்கிறது. இது மாணவர் களின் கல்வித்திறனை பாதிக் கும். இதுதவிர கல்விசார் அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செல்கின்றன. அதனால் மாநிலங்களின் கலாச்சார ரீதியிலான படிப்பு கிடைப்பதில் தடை ஏற்படும். ஆராய்ச்சி தலைப்புகள்கூட ஒன்றிய அரசின் தேசிய ஆராய்ச்சி மய்யம் மூலம் முடிவு செய்யப் படுகிறது.

இதனால் சமீபத்தில் பனா ரஸ் பல்கலை. ஆராய்ச்சி மாணவர்கள் மனுஸ்மிருதியை பற்றி மேற்கொண்ட ஆராய்ச் சிகள் மீண்டும் நம்மை வருணா சிரம காலத்துக்கு கொண்டு செல்லும் வகையில் உள்ளது. அதே போல், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (என்சிஇஆர்டி) டார்வினின் பரிணாம கொள்கை மற்றும் வேதியியல் வாய்ப்பாடு ஆகிய வற்றை நிராகரித்துள்ளது பெரும் பிரச்சினையாக பார்க்கப் படுகிறது. 

No comments:

Post a Comment