விவசாய தொழிலாளர்களுடன் நெற்கதிர் அறுத்த ராகுல் காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 30, 2023

விவசாய தொழிலாளர்களுடன் நெற்கதிர் அறுத்த ராகுல் காந்தி

ராய்ப்பூர், அக்.30 சத்தீஸ்கரில் ராகுல் காந்தி வயலில் இறங்கி விவசாய முதொழி லாளர்களுடன் இணைந்து நெற்கதிர் அறுத்தார். அறு வடை செய்து முழு விவசாயியாக மாறிய போட்டோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக பூபேஷ் பாகேல் உள்ளார். அந்த மாநி லத்துக்கு தற்போது சட்ட சபை தேர்தல் அறிவிக்கப்பட் டுள்ளது. அதாவது சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 17ஆம் தேதி 2ஆவது கட்டங் களாகவும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடி வுகள் அறிவிக்கப்பட உள் ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே நேரடியாக போட்டி நிலவுகிறது. இந்த மாநிலத்தில்மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் தான் தனி பெரும்பான்மை ஆட்சியை தக்கவைக்க காங் கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. மாறாக காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி அரியணை ஏற பாஜக களப்பணியாற்றி வருகிறது. இதனால் சத்தீஸ்கர் மாநில தலைவர்களுடன் சேர்ந்து காங்கிரஸ், பாஜக வின் தேசிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.

நெல் அறுவடை

இந்நிலையில் தான் ராகுல் காந்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக 2 நாள் பயணமாக சென்றார். 2ஆவது நாளான நேற்று (29.10.2023) ராகுல் காந்தி ராய்ப்பூர் அருகே உள்ள காதியா கிராமத்தில் நெல் அறுவடை செய்யும் விவசாயிகளை வயலில் சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி தலையில் சிவப்பு நிறத்தில் தலைப்பாகை கட்டி நெல் அறுக்கும் பணியில் ஈடுபட்டு விவசாயிகளோடு சேர்ந்து விவசாயியாகவே மாறிப் போனார். இந்த வேளையில் ராகுல் காந்தியுடன் முதல மைச்சர் பூபேஷ் பாகேல், துணை முதலமைச்சர் டிஎஸ் சிங் டியோ உள்ளிட்டோரும் இருந்தனர். 

சத்தீஸ்கர் மாநில தேர் தலையொட்டி காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு 5 முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக விவ சாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கான மானியம், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துதல் உள்ளிட்டவற்றை வழங்குவ தாக உறுதியளித்துள்ளது. இதனை விவசாயிகளிடம் எடுத்துக் கூறும் வகையில் ராகுல் காந்தி பிற விவசாயிகளுடன் சேர்ந்து வயலில் நெல் அறுவடை செய்தார்.

அதன்பிறகு ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நெல் அறுவடை செய்யும் போட் டோக்களை பதிவிட்டார். அதில், விவசாயிகள் மகிழ்ச்சி யாக இருந்தால் இந்தியாவும் மகிழ்ச்சியாக இருக்கும். விவசாயிகளை மகிழ்ச்சியாக்க 5 முக்கிய திட்டங்களை சத்தீஸ்கர் மாநில விவசாயிகளுக்கு காங்கிரஸ் செய்கிறது. நெல் லுக்கான குறைந்தபட்ச ஆதார  விலை என்பது குவிண்டா லுக்கு ரூ.2,640 வழங்கப்படும்.

26 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடிக்கு இடுபொருள் மானியம் வழங் கப்படும். 19 லட்சம் விவசாயிகளின் ரூ.10,000 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி, மின்சார கட்டணம் பாதியாக் குவது, 5 லட்சம் விவசாய தொழிலாளர்களுக்கு ஆண் டுக்கு ரூ.7 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது'' என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment