இந்நிகழ்ச்சியின் தொடக்க மாக வ.களத்தூர் பேருந்து நிலை யத்தில் கொடி ஏற்றி, பின்பு ராயப்பா நகரில் விழா தொடங் கியது. விழாவில் "மந்திரமா தந்திரமா" என்கிற அறிவியல் விளக்க நிகழ்ச்சி மூலம் மூட நம்பிக்கையை அகற்ற விழிப் புணர்வு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் வ.களத்தூர் கிளை அமைப்பாளர் சர்புதீன் வரவேற்புரை ஆற்றினார். கழக சொற்பொழிவாளர் பூவை புலி கேசி, தலைமை கழக அமைப்பா ளர் சிந்தனைச்செல்வன், வ.களத் தூர் ஊராட்சி மன்ற தலை வர் பிரபு, மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மணிவண்ணன், விடுதலை நீலமேகம், கோபாலகிருஷ்ணன், விசயேந்திரன், ஆறுமுகம், அண் ணாதுரை, துரைசாமி, ஆதிசிவம், அரங்கய்யா, அரங்க. வேலாயுதம் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை ஒன்றிய பெருந் தலைவர் ராமலிங்கம், முகம்மது காசிம், துரைசாமி, ரத்தினவேல், சீனிவாசராவ், சுடலைமணி, காமராசு, தமிழரசன், சரவணன், இனியன், மேலும் தோழமைக் கட்சிகளான விடுதலை சிறுத் தைகள் கட்சியினர், திமுகவினர், ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெருந்திர ளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியாக செயலாளர் சின்னசாமி நன்றி யுரை ஆற்றினார்.
No comments:
Post a Comment