சென்னை, அக்.27 - சிறு - குறு தொழில் முனைவோர்கள் மற்றும் முத லீட்டாளர்கள் தங்களு டைய நிலையான வரு மான வகைகளை விரிவு படுத்தவும், வளர்ந்து வரும் முதலீட்டு நிலப் பரப்பில் வாய்ப்புகளை ஆராயவும் பஜாஜ் ஃபின் சவர்வ் அசெட் மேனேஸ் மென்ட் நிறுவனம், அதன் நான்காவது நிலை யான வருமான முதலீட் டுத் திட்டமான பஜாஜ் ஃபின்சர்வ் வங்கி மற்றும் பி.எஸ்.யு. ஃபண்டை அறி முகப் படுத்தியுள்ளது.
இந்த ஃபண்ட் வரு வாயை அதிகப்படுத்தும் வகையில், 5 ஆண்டு முதிர்வு நிலையை கொண்டுள்ளதோடு, அதே நேரத்தில் முதலீடு கள் தரமான கடன் திட் டங்களில் மேற்கொள்ளப் படுவதை உறுதி செய்கி றது. மேலும் தொழில் முறை நிதி மேலாண்மை யுடன் கிடைக்க இந்தத் திட்டம் வழிவகுக்கிறது. இதற்கான புதிய நிதி ஆரம்ப நிலை சந்தாவுக்கு அக்டோபர் 25ஆம் தேதி திறக்கப்பட்டு, நவம்பர் 6ஆம் தேதி முடிவடையும் என இந்நிறுவன தலைமை செயல் அதிகாரி கணேஷ் மோகன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment