சேலம் அயோத்தியா பட்டணத்தில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 17, 2023

சேலம் அயோத்தியா பட்டணத்தில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

சேலம், அக்.17- சேலம் மாவட் டம், அயோத்தியா பட்டணம் - ரயில்வேகேட் தாண்டி அமைந் துள்ள பேருந்து நிலையம் அருகில் -_ கடவுள் இல்லை கே.சிவக்குமார் நினைவரங்க மேடை அமைக்கப் பட்டு, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் கே.கமலம் தலைமை யில், 28.9.2023 வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிர் கலைஞர் நூற்றாண்டு விழா! தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா என முப்பெரும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முதல் நிகழ்ச்சியாக, ஈட்டி கணேசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகரச் செயலாளர் அனைவரை யும் வவேற்றுப் பேசினார்.

கழக தலைவர் அ.ச.இளவழகன், மாவட்ட செயலாளர் பா.வைரம், கழக காப்பாளர் கி.ஜவகர், மாவட்ட ப.க. தலைவர் வீரமணி ராஜூ, மாவட்ட வழக்குரைஞரணி இரா.செல்வக்குமார் ஆகியோர் முன் னிலை வகித்து உரையாற்றினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி தலைவர் அயோத்தியா பட்டணம் - கே.செல்வராஜ், ஒன் றிய குழு தலைவர் அயோத்தியா பட்டணம் வி.ஹேமலதா, வழக் குரைஞர் அ.செந்தில்குமார், அக ரம் இராசேந்திரன் மாவட்ட தி.மு.க. பிரதிநிதி பெ.இன்பராசு, அயோத்தியா பட்டணம் பேரூ ராட்சி துணை தலைவர் செல்வ சூர்யா சேது, சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தந்தை பெரியாரின் படத்தினை திறந்து வைத்து கழக பேச்சாளர் இரா.அன்பழகன் சொற்பொழி வாற்றினார்.

ஒன்றிய தி.மு.க. செயலாளர் அ.விஜயகுமார் அவர்கள் முத்தமி ழறிஞர் கலைஞரின் படத்தினை திறந்து வைத்து, விடுதலை மல ரினை வெளியிட்டார்.

தி.மு.க. தோழர்கள் அனைவம் நூலினைப் பெற்றுக் கொண்டார் கள். அதற்குப் பிறகு, விஜயகுமார் சிறப்பானதொரு உரையினை நிகழ்த்தினார்.

இறுதியாக, தலைமைக் கழக அமைப்பாளர் எடப்பாடி கா.ந.பாலு சிறப்புரையாற்றினார். விழாவில் அனைவருக்கும் பய னாடை அணிவித்து சிறப்பு செய் யப்பட்டது. விழாவில் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

அம்மாப் பேட்டை பகுதிகள் தலைவர் க.குமாரதாசன் நன்றி கூற பிறந்த நாள் கூட்டம் இனிதே நிறைவேறியது.

No comments:

Post a Comment