புதுடில்லி, அக்.4 பழிவாங்கும் நடவடிக்கை கூடாது என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அம லாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை ரத்து செய்ய மறுத்த பஞ்சாப் மற்றும் அரி யானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, வி3வி ரியல் எஸ்டேட் குழுமத்தின் இயக்குநர்கள் பங்கஜ் பன்சால் மற்றும் பசந்த் பன்சால் ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறையின் "நடவடிக்கை பழிவாங்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை" என்பதை அடிக் கோடிட்டுக் காட்டிய உச்சநீதிமன்றம், கைது செய்யப்படும்போது குற்றம் சாட்டப்பட்ட வருக்கு எழுத்துப்பூர்வமாக கைதுக்கான காரணங்களை அமலாக்கத்துறை வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
அமலாக்கத்துறை நியாயமாகவும் வெளிப் படைத் தன்மையுடனும் செயல்பட வேண் டும். இனிமேல், கைது செய்யப்பட்ட நபருக்கு விதிவிலக்கு இல்லாமல், கைது செய்யப்பட்ட தற்கான காரணங்களின் நகல் வழங்கப்படுவது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம் என்று நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் பி.வி.சஞ்சய் குமார் அமர்வு உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாய்மொழி யாக மட்டுமே வாசிக்கப்பட்டதாகவும், எழுத் துப்பூர்வமாக அவர்களுக்கு வழங்கப்பட வில்லை என்றும் குறிப்பிட்ட விசாரணை அமர்வு, இது "தன்னிச்சையான செயல்" என்று கூறியது.
மேலும் இதற்கான மறுப்பை வெளிப்படுத்திய அமர்வு, "நிகழ்வுகளின் காலவரிசை நிறைய பேசுகிறது மற்றும் அமலாக்கத்துறையின் செயல்பாட்டு பாணி எதிர்மறையாக இல்லாவிட்டாலும் மோசமாக பிரதிபலிக்கிறது" என்று கூறியது.
கைது செய்யப்பட்டதை சட்டவிரோத மானதாகக் கருதிய அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதற்கான காரணங்களை விசாரணை அதிகாரி படிப்பது அரசமைப்பின் 22 (1) மற்றும் றிவிலிகி இன் பிரிவு 19 (1) இன் ஆணையை நிறைவேற்றவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.
No comments:
Post a Comment