3 சதவீத இடஒதுக்கீடு
தமிழ்நாட்டினை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 3 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் www.sdat.tn.gov.in எனும் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.1000 வரவு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், ஒரு நாள் முன்பாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
செவிலியருக்கு...
செவிலியர் பணிக்கு தேர்ச்சி பெற்ற செவிலி யர்களுக்கு சவுதி அரேபியா செல்வதற்கான பயண கோப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
குடியிருப்புகள்
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் 44,457 குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந் நிலையில், கடந்த 6 மாதங்களில் 33,434 குடியி ருப்புகள் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி தகவல்.
No comments:
Post a Comment