கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பங்கேற்று வகுப்பெடுத்தார்
பொன்னேரி, அக். 16- கும்முடிபூண்டி கழக மாவட்டம் பொன்னேரி சங்கரபாண்டியன் திருமண மண்டபத்தில் 15.10.2023 அன்று காலை 10 மணி அளவில் திராவிடர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 81 மாணவர்களு டன் தொடங்கி நடைபெற்றது.
பொன்னேரி நகர செயலாளர் மு.சுதாகர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர்
ஜே. பாஸ்கரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ சுரேஷ், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வெங்கடே சன், மாவட்ட இளைஞரணி தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் ராஜசேகர், பொன்னேரி நகர தலைவர் அருள், மேனாள் மாவட்ட தலைவர் உதயகுமார், மாவட்ட மகளிர் அணி தலைவர் இராணி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செல்வி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ஜெயராணி துரை. முத்துகிருஷ்ணன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் இளையராணி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினார்கள். மாவட்டத் தலைவர் ஆனந்தன் நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார். தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் பயிற்சிப் பட்ட றையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தந்தை பெரியார் ஓர் அறிமுகம் என்னும் தலைப்பில் ஆசிரியர் மா.அழகிரிசாமி, தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள் என்னும் தலைப்பில் திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, அறிவியலும் மூடநம்பிக்கையும் என்ற தலைப்பில் எழுத்தாளர் மஞ்சை வசந்தன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் என்னும் தலைப்பில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வகுப்பு எடுத்தனர்.
பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு என்னும் தலைப்பில் திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வகுப்பு எடுத்தார்.
தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும் என்னும் தலைப்பில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வகுப்பு எடுத்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைப் பொறுப்பாளர் இரா. ஜெயக்குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார். மிகச் சிறப்பாக பெரியாரியல் பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்து நடத்திய கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களை பாராட்டியும் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் உரையாற்றினார்.5 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பயிற்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட் டது. 10க்கு மேற்பட்ட இருபால் மாணவர்கள் பயிற்சிப் பட்ட றையின் பலன்கள் குறித்து உரையாற்றினர். மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், மேனாள் மாவட்ட செயலாளர் ரமேஷ், தொழிலாளர் அணி அசோகன், சுதன்ராஜ், எழில், புழல் ஜனாதிபதி, எல்லாபுரம் அருணகிரி, வடகரை உதயகுமார், வினோத் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கழகப் பொறுப்பாளர்கள் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment