விஞ்ஞானிகள் மூவருக்கு இயற்பியல் நோபல் பரிசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 4, 2023

விஞ்ஞானிகள் மூவருக்கு இயற்பியல் நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம், அக். 4  இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று அறிவியலாளர்களுக் குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மருத்துவம், இயற் பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 துறை களில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக் கான நோபல் பரிசுகள் கடந்த 2 ஆம் தேதி முதல் அறிவிக்கப்படுகிறது. முதல் நாளில் மருத் துவத்துக்கான நோபல் பரிசு ட்ரூ வெய்ஸ் மேன், கட்டாலின் கரிக்கோவுக்கு அறிவிக் கப்பட்டது. 2 ஆம் நாளான நேற்று  (3.10.2023) இயற்பியலுக்கான நோபல் பரிசு அறி விக்கப்பட்டது. 

இதன்படி அமெரிக்காவின் ஒகையோ மாகாண பல்கலைக்கழக பேராசிரியர் பியர்லி அகோஸ்டினி, ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் இன்ஸ்டிடியூட் பேராசிரி யர் பெரன்க் க்ரவுஸ், சுவீடனின் லூண்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆனி ஹூலியர் ஆகிய மூன்று விஞ்ஞானி களுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந் தளிக்கப்படுகிறது. 

இதுகுறித்து ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்சஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

அணுவுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள உதவும் மிக குறுகிய அதிர்வுகொண்ட ஒளியை உரு வாக்குவது தொடர்பான ஆய்வில் பியர்லி அகோஸ்டினி, பெரன்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய மூன்று விஞ்ஞானிகளும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் எலக்ட் ரான்களின் நகர்வை மிகத் துல்லியமாகக் கணக்கிட முடியும். எலக்ட்ரான்களை பொறுத்த வரை அட்டோசெகன்ட் பொழு தில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அட்டோ செகன்ட் என்பது ஒரு விநாடியில் மிக, மிகச் சிறிய பகுதியாகும். மூன்று விஞ்ஞானிகளின் ஆய்வால்அட்டோசெகன்ட் பொழுதில் எலக்ட்ரான்களில் ஏற்படும் மாற்றத்தை மிகத் துல்லியமாக கணக்கிட முடியும். இதன்மூலம் எலக்ட்ரான்களின் உலகத்தில் நுழை வதற்கான கதவு திறந்திருக்கிறது. 

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள மூன்று அறி வியலாளர் களுக்கு ரூ.8.30 கோடி ரொக்கம் பகிர்ந்து அளிக்கப்படும்.

No comments:

Post a Comment