சென்னை, அக்.27 பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஆளுநரின் புகாருக்கு காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேற்று (26.10.2023) வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
25.10.2023 அன்று மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (42) கிண்டி சர்தார் படேல் சாலை வழியாக ஆளுநர் மாளிகை அருகே தனியாக நடந்து வந்தார். அவர் பெட்ரோல் நிரம்பிய 4 பாட்டில்களைக் கொண்டுவந்து, அவற்றை ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சர்தார்படேல் சாலையின் எதிர்ப்புறத்தில் இருந்து எறிய முற்பட்டபோது, ஆளுநர் மாளிகை வெளிப்புறத்தில் பாதுகாப்புப் பணி யிலிருந்த தமிழ்நாடு காவல்துறையால் தடுக்கப் பட்டார். கைது செய்யப்படுவதற்கு பயந்து, சம்பவ இடத்துக்கு எதிரே சற்று தூரத்திலிருந்து 2பாட்டில்களை வீசினார். அவைஆளுநர் மாளிகையின் அருகேசர்தார் படேல் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பரண்களுக்கு அருகே விழுந்தது. பின்னர், அவர் ஆளுநர் மாளி கையின்பிரதான வாயிலிலிருந்து சுமார்30 மீட்டர் தூரத்தில், பாதுகாப்பு காவலர்களால் உட னடியாக கைது செய்யப்பட்டார். இந்நிகழ்வால், பொருட்களுக்கோ அல்லது எந்த நபருக்கோ எவ்வித சேதமோ, காயமோ ஏற்படவில்லை.
கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், சம்பந்தப்பட்ட நபர் தேனாம் பேட்டையிலிருந்து, நிகழ்விடம்வரை தனி யாகவே வந்துள்ளார். தற்போது அவர் கிண்டி காவலர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கைது செய் யப்பட்டுள்ள வினோத் மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் இதேபோல் 3 இடங்களில் வீசியுள்ளார். அந்த வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆளுநருக்கு எதிராக பகிரங்க மிரட்டல், அவதூறுப் பேச்சுமற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதாகவும், அவை தொடர்பாக காவல்துறையினர் நியாய மான முறையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை எனவும், மேலும் அந்நிகழ் வுகள் தொடர்பாக எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டு, 25.10.2023 இல் மருத்துவர் செங்கோட்டையன் (ஆளுநரின் துணைச் செயலாளர்) புகார் அளித்துள்ளார்.
25.10.2023 இல் நடந்த சம்பவம் ஒரு தனிப் பட்ட நபரால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே சர்தார்படேல் சாலையில் நடத்தப்பட்ட செய லாகும். இந்த நிகழ்வில்புகாரில் தெரிவிக்கப் பட்டதுபோல் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டுவீசப்பட்டது எனவும், அவர் கள்அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ஆளுநர் மாளிகை வாயிற் காப்பாளர்களால் (Sentry) தடுத்து நிறுத்தப்பட் டுள்ளார்கள் எனவும், மேலும்அங்கு வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வெடித்தது என்றும் சொல் வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம் பானது.
அதேபோல் ஏப்ரல் 19, 2022 இல் மயிலாடு துறை சென்றபோது ஆளுநரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்பதும் உண்மைக்கு புறம்பானது. ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் அப்பகுதியை கடந்து சென்றபின்னர் அங்கு கூடியிருந்தவர் களில் சிலர் கருப்புக்கொடிகளை சாலையில் வீசினர். அக்கொடிகள் ஆளுநரின் வாகனம் மற்றும் கான்வாய் முழுமையாக சென்றபின் பின்னால் வந்த வாகனங்கள் மீது விழுந்தன.
இந்நிகழ்வு தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டு73 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்படி வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. மேற்படி சம்பவங்கள் அனைத்துக்கும் காணொலி ஆதா ரங்கள் உள்ளன. மேலும், ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். மேலே குறிப்பிட்டுள்ளதுபோல எந்தவித நிககளும் நடைபெறவில்லை. ஆளுநர் மாளி கையின் பாதுகாப்புக்காக சர்தார்படேல் சாலை யில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புக் காவலர்கள் விழிப்புடன்இருந்த காரணத்தாலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்ததாலும், உடனடியாககுற்றவாளி கைது செய்யப்பட்டார்.
மேற்படி வழக்கில் முழுமையான விசா ரணை மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே, கண்காணிப்பு கேமரா பதிவுகள் முழுமையாக சேகரிக்கப்பட்டுள்ளன. மேற்படி வழக்கில் முழுமையான நியாயமான விசாரணை மேற் கொள்ளப்படும். ஆளுநருக்கும் மற்றும் அவரது மாளிகைக்கும் தமிழ்நாடு காவல் துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment