கோவில்பட்டி,அக்.21-கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் முதன் முறையாக முதுகு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இலுப் பையூரணி ஊராட்சி சிந்தா மணி நகரைச் சேர்ந்தவர் பழனி சாமி (55). இவருக்கு திருமண மாகி மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். பழனி சாமி லோடு ஆட்டோ ஓட்டு நராக பணிபு ரிந்து வருகிறார்.
இந்த சூழலில் கடந்த மாதம் 19ஆம் தேதி தனது லோடு ஆட்டோவில் கோவில்பட்டி யில் இருந்து விருதுநகர் மாவட் டம் மீனாட்சிபுரத்துக்கு சென்ட்ரிங் பலகைகளை ஏற்றிக் கொண்டு சென்றார். அங்கு அவற்றை இறக்கி விட்டு, திரும்பி வரும் போது மதுரை -_ திருநெல்வேலி நான்கு வழிச் சாலையில் லோடு ஆட்டோ மீது, பின்னால் வந்த கார் ஒன்று மோதியது.
இதில், லோடு ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத் தில் பழனிசாமி படுகாயமடைந் தார். உடனடியாக அக்கம்பக் கத்தினர் அவரை மீட்டு அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக கோவில் பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத் துவமனையில் அனு மதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வந்தது.
ஆனால், பழனிசாமியால் எழுந்து அமரவோ, நடக்கவோ முடியவில்லை. முதுகு பகுதியில் கடும் வலியால் அவதிப்பட் டார். அவருக்கு ஸ்கேன் பரி சோதனை செய்தபோது, நடு முதுகு எலும்பு பகுதியில் 2 இடத்தில் முறிவு ஏற்பட்டிருந் தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு வலியை குறைக்கும் மருந்து களை மருத்துவர்களை கொடுத் தனர். பின்னர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத் தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி பெற் றனர்.
தொடர்ந்து கடந்த 5ஆம் தேதி மருத்துவமனை கண்காணிப் பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் தலைமையில் மருத்துவர்கள் பாண்டி பிரகாஷ், மோசஸ் பால், மனோஜ் குமார், மயக்க மருந்து நிபுணர் இளங்கோ உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் பழனிசா மிக்கு அறுவை சிகிச்சை மேற் கொண்டனர். தொடர்ந்து 14 நாட்கள் கண்காணிப்பில் இருந்த பழனிசாமி இன்று சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவ மனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “முதுகு பகுதி எலும்பில் ஏற்படும் முறிவு அறுவை சிகிச்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளில்தான் நடந்து வந் தது. முதன்முறையாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் வெற்றிகரமாக நாங்கள் மேற்கொண்டுள்ளோம். விபத் தில் சிக்கிய பழனிசாமிக்கு நடந்த ஸ்கேன் பரிசோதனையில் அவரது நடு முதுகு எலும்பில் 2 இடங்களில் முறிவு இருந்த கண்டறியப்பட்டது.
இதையடுத்து இணை இயக் குநர் (பொறுப்பு) மருத்துவர் அகத் தியனிடம் வழிகாட்டுதல்படி அறுவை சிகிச்சை செய்து முடித் தோம்.
இதற்காக 10 செ.மீ. உயரத்தி லான 2 டைட்டானியம் கம்பி கள் வைக்கப்பட்டு, 4 ஸ்க்ரூக்கள் பொருத் தப்பட்டன. சாதாரண கம்பியை விட டைட்டானியம் கம்பிகள் தொற்று ஏற்படும் சாத்தியம் குறைவு. தொடர்ந்து 3 நாளில் இருந்து அவருக்கு இயன்முறை (பிசியோதெரபி) பயிற்சியும், நடைபயிற்சியும் வழங்கினோம்.
சுமார் 14 நாட்கள் எங்களது கண்காணிப்பில் வைத்திருந்து, இன்று அவரை சிகிச்சை முடித்து அனுப்புகிறோம். அவருக்கு சில பயிற்சிகளை கற்றுக்கொடுத்துள் ளோம். அதனை அவர் வீட்டில் இருந்தவாறே செய்ய வேண் டும். 3 மாத ஓய்வுக்கு பின்னர் அவர் வேலைக்கு செல்லலாம். அடுத்து 6 மாதங்கள் வரை, மாதம் ஒரு முறை அவரை பரிசோதனைக்கு வர வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது" என்றார். சிகிச்சை பெற்ற பழனி சாமி கூறுகையில், "விபத்து நடந்த பின் என்னால் எழ முடிய வில்லை. பயந்துவிட்டேன்.
கோவில்பட்டி அரசு மருத் துவமனையில் என்னை பரி சோதித்த மருத்துவர்கள் முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என் றார்கள். 15 நாட்கள் உட்கார முடியவில்லை.
அறுவை சிகிச்சை செய்யப் பட்டபின் என்னால் உட்கார முடிகிறது. நடக்க முடிகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் தன்னை நன்கு கவனித்துக் கொண்ட காரணத்தால் இன்று நடக்க முடிகிறது.
இதே அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் மூன்று லட்ச ரூபாய் வரை செலவு ஆகி இருக்கும். ஆனால் இங்கே முதலமைச்ச ரின் காப்பீட்டு திட்டத்தினால் எனக்கு தற்போது உடல்நிலை சரியாகியுள்ளது" என்றார்.
அரசு மருத்துவமனையில் முதன்முறையாக முதுகு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத் துள்ள அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
No comments:
Post a Comment