கும்பகோணம், பாபநாசம், திரு விடைமருதூர் உள்ளிட்ட 3 வட் டங்களில் பள்ளிக் கட்டடம், அங்கன் வாடி கட்டிடம் உள்ளிட்ட கட்டி முடிக்கப்பட்ட 35 கட்டடங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங் கேற்று திறந்து வைத்தார். முன்னதாக, கும்பகோணம் ரயில் நிலைய சாலையில் கட்டப்பட்டு வரும் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட அலுவலகக் கட்டடப் பணியினை அவர். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த அவர், "இந்த கட்டடத் தில் கலைஞர் சிலை அமைக்கும் பணி யுடன் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்தவுடன் திறப்பு விழாவுக்குத் தேதி வழங்குகிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேர்வு நேரத்தில் நடைபெறும் மோசடி என்பது இப் போது மட்டும் நடப்பது கிடையாது. வட மாநிலங் களில் நடைபெறும் போட்டித் தேர்வு களில் இதுபோன்று தொடர்ச் சியாகவே மோசடி நடைபெற்று வருகிறது. அதுவும் தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் வட இந்தி யர்கள் ப்ளூ டூத் போன்ற உபகர ணங்களைக் கொண்டு மோசடி செய்து வெற்றி பெறுவது தொடர்கதையாகி வருகிறது.
தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் வட இந்தியர்கள், குறிப்பாக ஹிந்தி பேசுபவர்கள் முறைகேடுகளில் ஈடு பட்டு வேலைகளில் சேருகின்றனர். இதனை ஒன்றிய அரசு தெரிந்தும் தெரியாததுபோல் இருந்து விடுகிறது. ஆனால், தமிழகப் பள்ளி, கல்லூரிகள், அரசுத் தேர்வாணையத் தேர்வுகளில் இதுபோல் முறைகேடு இல்லாமல் தேர்வுகள் நேர்மையாக நடை பெறுவதே எங்களுக்குப் பெருமிதம்" என்றார் அவருடன் அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாநிலங் களவை உறுப்பினர் எஸ்.கல்யாண சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திர சேகரன், துணை மேயர் சு.ப.தமிழழகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment