சுகாதாரத் துறையில் செவிலியர் பணிஇடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம்: துணை செவிலியர்கள் / கிராம சுகாதார செவிலியர்கள் பிரிவில் 2250 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பிளஸ் 2, இரண்டு ஆண்டு துணை செவிலியர் / பல்நோக்கு சுகாதார பணியாளருக்கான பயிற்சி படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2023 அடிப்படையில் பொதுப் பிரிவினர் 42 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு
ஊக்க மதிப்பெண்: கரோனா காலத்தில் அரசு, ‘கரோனா கேர்’ மையங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., /எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 300.
கடைசி நாள்: 31.10.2023
விவரங்களுக்கு: mrbonline.in
No comments:
Post a Comment