தென்காசி,அக்.13- முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட திமுக வழக்குரை ஞர் அணி சார்பில் கல்லூரி மாணவ மாணவியருக்கான கருத் தரங்கம் வாசுதேவநல்லூர் தங்கப் பழம் வேளாண்மை கல்லூரி கலை யரங்கத்தில் வைத்து நடைபெற்றது
கருத்தரங்கத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா ளரும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினருமான வழக்குரைஞர் ராஜா ஈஸ்வரன் தலைமை தாங் கினார். தங்கப்பழம் கல்விக் குழும நிறுவனர் எஸ் தங்கப்பழம் மற்றும் செயலாளர் எஸ் டி முருகேசன் திமுக தலைமை செயற்குழு உறுப் பினர் யுஎஸ் டி சீனிவாசன் தங்கப்பழம் சட்டக் கல்லூரி முதல் வர் முனைவர் ராஜலட்சுமி ஆகி யோர் முன்னிலை வைத்தனர்
கருத்தரங்கில் கலந்து கொண்ட வர்களை தென்காசி வடக்கு மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் புளியங்குடி பிச் சையா வரவேற்றார்.
நிகழ்ச்சிகளை மாவட்ட வழக்கு ரைஞர் அணி தலைவர் எம். முத்து ராமலிங்கம் தொகுத்து வழங் கினார். மேனாள் வழக்குரைஞர் அணி அமைப்பாளர் எம்.பி.கே.மருதப்பன் வாழ்த்துரை வழங் கினார்.
திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே. மெ மதிவதனி திராவிடர் இயக் கமும் சமூக நீதியும் என்ற தலைப் பில் கடந்த 100 ஆண்டுகளாக திராவிட இயக்கங்களின் பல்வேறு போராட்டங்கள் மற்றும் திட்டங் களால் சமூக முன்னேற்றம் ஏற் பட்டது குறித்து விரிவாக சிறப்பு உரையாற்றினார்.
முடிவில் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர் ராம லிங்கம் நன்றி உரை வழங்கினார். மேற்படி கருத்தரங்கில் வழக்குரை ஞர் அணி துணைத் தலைவர் முத்துவேலன், துணை அமைப் பாளர்கள் அருணாச்சலம், ஜெயக் குமார், காளிராஜ், தனசேகரன், பிரபாகரன் மற்றும் வழக்குரைஞர் குகன் தென்காசி மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் த.வீரன் சிவகிரி மாவட்ட பிரதிநிதி நல்ல சிவன் சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவர் வெங்கடேசன் மற்றும் தங்கப்பழம் சட்டக் கல்லூரி மற் றும் வேளாண்மை கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment