விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தோழர் உஞ்சை அரசன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 26, 2023

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தோழர் உஞ்சை அரசன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தோழர் உஞ்சை அரசன் அவர் களின் மறைவுச் செய்தி (24.10.2023) அறிந்து வருந் துகிறோம். பள்ளி ஆசிரியர் பணியைத் துறந்து, பொது வாழ்க் கைக்கு வந்து எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்குத் தோன்றாத் துணையாகப் பணியாற்றி, விடுதலைச் சிறுத்தைகளின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய தோழர் உஞ்சை அரசனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் மற்றும் அவரது இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்


No comments:

Post a Comment